தாம்பரம் – காரைக்கால் ரயில் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Tambaram - Karaikkal train extended to Velankanni | தாம்பரம் - காரைக்கால் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில், எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்பட்டு வேளாங்கண்ணி வரை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அட்டவணையை விரிவாக பார்க்கலாம்.

தாம்பரம் - காரைக்கால் ரயில் வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை டூ பீகார் கோடை கால சிறப்பு ரயில் அறிவிப்பு

Published: 

18 Mar 2026 07:31 AM

 IST

சென்னை, மார்ச் 18 : இந்திய பொதுமக்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. தமிழகத்திலும் ஏராளமான பொதுமக்கள் ரயில் போக்குவரத்தை பெரிதாக நம்பியுள்ளனர். இந்த நிலையில், தாம்பரம் – காரைக்கால் (Tambaram – Karaikkal) இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில், மார்ச் 20, 2026 முதல் வேளாங்கண்ணி வரை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. இந்த நிலையில், ரயில் சேவை நீட்டிக்கப்படுவது குறித்து தெற்கு ரயில்வே கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேளாங்கண்ணி வரை நீட்டிக்கப்பட உள்ள ரயில்

விரைவு ரயிலாக மாற்றப்பட்டுள்ள இந்த சிறப்பு ரயிலின் புதிய அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது, தாம்பரத்தில் இருந்து மார்ச் 20, 2026 அன்று முதல் இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் விரைவு ரயில், வண்டி எண்.16175, பேரளத்தில் இருந்து திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வழியாக வேளாங்கண்ணிக்கு அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Tanjavur Constituency Election 2026: டெல்டா மாவட்டமான தஞ்சை சட்டமன்ற தொகுதி.. இம்முறையும் திமுக வெற்றியை கைப்பற்றுமா?

மறுமார்க்கமாக தாம்பரம் வரும் ரயில்

இதேபோல மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து மார்ச் 20, 2026 அன்று முதல் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரயில், வண்டி எண்.16176, பேரளத்தில் இருந்து திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், வழியாக அடுத்த நாள் அதிகாலை 4.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு எதிராக ராமதாஸ் போட்டி வேட்பாளரை அறிவிக்க மாட்டார் – திலகபாமா

சிறப்பு ரயிலில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் – தெற்கு ரயில்வே

இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து பேரளம் வரையில் ஏற்கனவே உள்ள கால அட்டவணை படி இயக்கப்படும். இதுவரை சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்த இந்த ரயில், மார்ச் 20, 2026 முதல் விரைவு ரயிலாக இயக்கப்பட உள்ளதன் காரணமாக இந்த ரயிலின் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி