ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை.. அசாம் வாலிபர் கைது..!

Sriperumbudur Child Death: காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் 5 வயது ஆரவ் குமார் காணாமல் போனதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் மூலம் அசாமியைச் சேர்ந்த போல்தேவ் என்பவர் சிறுவனை அழைத்துச் சென்றது தெரியவந்தது. ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால், போல்தேவ் சிறுவனை கல்லால் அடித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி: ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை.. அசாம் வாலிபர் கைது..!

கைது செய்யப்பட்ட அசாம் இளைஞர்

Published: 

22 Jun 2025 11:37 AM

 IST

காஞ்சிபுரம் ஜூன் 22: காஞ்சிபுரம் மாவட்டம் (Kanchipuram District) ஸ்ரீபெரும்புதூரில் 5 வயது சிறுவன் ஆரவ் குமார் (5-year-old boy Aarav Kumar) காணாமல் போனதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு, சிறுவன் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். முதலில் தவறி விழுந்து உயிரிழந்ததாக சந்தேகித்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அசாமைச் சேர்ந்த போல்தேவ் (Boldev from Assam) என்பவர் சிறுவனை அழைத்துச் செல்வது பதிவாகி இருந்தது. விசாரணையில், ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கல்லால் அடித்து கொன்றதாக (Boy beaten to death with a stone) போல்தேவ் தெரிவித்துளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காணாமல் போன 5 வயது சிறுவன்

ஸ்ரீபெரும்புதூர் அருகே 5 வயது சிறுவன் இறந்த நிலையுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார் மற்றும் காஜல் குமாரி தம்பதியுடன் தங்களது மகன் ஆரவ் குமார் (5) வசித்து வந்தார். கடந்த ஜூன் 9ஆம் தேதி சிறுவன் காணாமல் போனதையடுத்து, அவரது தாய் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சிறுவன் சடலமாக மீட்பு… சிசிடிவி கேமராவில் ஆய்வு

போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு சிறுவனை தேடிவந்தனர். இதற்கிடையே, அதே கிராமத்தில் உள்ள அடர்ந்த முட்புதரில், ஆரவ் குமார் சடலமாக அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். ஆரம்பத்தில், தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் சந்தேகித்தனர். இருப்பினும், அருகில் உள்ள குடியிருப்பின் முன் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஒரு இளைஞர் சிறுவனை அழைத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் கொலை: அசாம் இளைஞர் கைது

அதன் அடிப்படையில், அசாமைச் சேர்ந்த போல்தேவ் (22) என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், ஓரினச்சேர்க்கை முயற்சியை சிறுவன் நிராகரித்ததையடுத்து, போல்தேவ் அவனை முட்புதருக்குள் அழைத்துச் சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக வாக்குமூலம் வழங்கியதாக தெரிகிறது. தற்போது போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

தமிழகத்தில் அண்மைக்காலமாக பல்வேறு வகையான குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல், ஆள்கள் கடத்தல், போதைப்பொருள் விநியோகம், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்றவை தொடர்ந்து அதிகரிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த அவசரத்தையும், அரசின் கண்காணிப்பு பொறுப்பையும் வலியுறுத்தி வருகின்றனர்.

மனிதர்களை குளிப்பாட்டும் மெஷினை உருவாக்கிய ஜப்பான் - அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த முட்டையின் விலை ரூ.236 கோடி தானாம்.. ஷாக் ஆகாதீங்க!!
நேபாளம் வெளியிட்ட புதிய 100 ரூபாய் நோட்டில் இடம்பெற்ற இந்திய பகுதி.. எல்லை குறித்து மீண்டும் உருவான சர்ச்சை!!
இந்தியாவின் கோடீஸ்வர பிச்சைக்காரர் இவர் தான்.. அவரது சொத்து மதிப்பு தெரியுமா?