கார்த்திகை தீபம் விடுமுறை… சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எங்கிருந்து தெரியுமா?

Special Buses : கார்த்திகை தீபம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு நவம்பர் 16 மற்றும் நவம்பர் 17, 2025 ஆகிய 2 நாட்கள் சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் இந்த பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கார்த்திகை தீபம் விடுமுறை... சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு  - எங்கிருந்து தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Updated On: 

14 Nov 2025 20:22 PM

 IST

சென்னை, நம்பர் 14 : தமிழ்நாட்டில் கார்த்திகை தீபம் (Karthigai month) திருவிழா வெகு விமர்சையாக கொண்டடாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்து  (Special Bus) சேவைகளை இயக்கவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து கோவில் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல மக்கள் செல்ல ஏதுவாக 690 பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து நவம்பர் 15, 2025  நாளை 340 சிறப்பு பேருந்துகளும், நவம்பர் 16, 2025 மறுநாளில் 350 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இவை திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கும்பகோணம், கோயம்புத்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரலாம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், ஓசூர், பெங்களூரு மற்றும் திருவண்ணாமலை போன்ற பயணம் செய்ய விரும்புகிறவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் வழித்தடங்களில் செல்லும் பயணிகள் அதிகம் இருப்பதால், அந்த பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : நெருங்கும் தேர்தல்: மீண்டும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி!

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரிலிருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், மாதவரம் பேருந்துநிலையத்திலும் இரண்டு நாட்களுக்கு 20 கூடுதல் பேருந்துகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளால் மாநிலம் முழுவதும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி பயணம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு மார்க்கமாக செல்லும் பயணிகள் அதிகமாக இருப்பதால், அந்த நாளுக்கான சிறப்பு பேருந்துகள் பெருமளவில் இயக்கப்படவுள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளும், அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : ஆணவக்கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம்.. 3 மாதங்களில் பரிந்துரை வழங்க முடிவு..

முன் பதிவில் ஆர்வம் காட்டும் பயணிகள்

இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 15, 2025  அன்று பயணம் செய்வதற்கு 7,200 பேரும், மறுநாள் நவம்பர் 16, 2025 அன்று பயணம் செய்வதற்கு 3,000 பேரும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்புவதற்கு 7,500 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுவதை தவிர்க்க www.tnstc.in மற்றும் TNSTC மொபைல் அப்ளிக்கேஷன் மூலம் முன்பதிவு செய்ய பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வார இறுதி தினங்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் தமிழக அரசின் கூடுதல் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளளலாம்.