நாளை முதல் தாம்பரம் – எழும்பூர் இடையே ரயில் சேவை ரத்து.. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..
Chennai Egmore - Tambaram Train Service: சென்னை எழும்பூரில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் 2025 நவம்பர் 10 முதம் 2025 நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 9, 2025: சென்னை எழும்பூரில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பராமரிப்பு பணிகளின் காரணமாக அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த சில முக்கிய ரயில்கள் — உழவன், அனந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் — தாம்பரத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. இந்த மாற்றம் 2025 செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் 2025 நவம்பர் 10 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
நாளை நவம்பர் 10 என்பதால், இந்த ரயில்கள் வழக்கம்போல் சென்னை எழும்பூரில் இருந்து இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால், சில ரயில்களின் இயக்கத்தில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை.. Total Failure மாடல் அரசு – எடப்பாடி பழனிசாமி காட்டம்..
தென் மாவட்டங்களுக்கு இயங்கும் ரயிலில் மாற்றம்:
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வண்டி எண் 16866 தஞ்சாவூர்–சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் உழவன் விரைவு ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவன் விரைவு ரயில் போலவே, கொல்லம் – சென்னை எழும்பூர் இடையே இயங்கும் அனந்தபுரி விரைவு ரயில், ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் இடையே இயங்கும் சேது விரைவு ரயில் ஆகிய ரயில்கள் 2025 நவம்பர் 10 முதல் 2025 நவம்பர் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த முடியாது’ செங்கோட்டையன் பளார்!!
சென்னை தாம்பரம் – எழும்பூர் இடையே ரயில் சேவை ரத்து:
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் வரை இயக்கப்படும் உழவன் விரைவு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் வரை இயக்கப்படும் அனந்தபுரி விரைவு ரயில், சென்னை எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் சேது விரைவு ரயில், இவை அனைத்தும் சென்னை எழும்பூர் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட ரயில்கள் அனைத்தும் தாம்பரம் – எழும்பூர் இடையே 2025 நவம்பர் 11 முதல் 2025 நவம்பர் 30 வரை இயங்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மும்பை வரை செல்லக்கூடிய சி.எஸ்.எம்.டி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை எழும்பூர்–குருவாயூர்–சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் தாம்பரம் முதல் தொடங்கி தாம்பரத்தில் முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.