வைகுண்ட ஏகாதசி… இந்த ரயில்கள் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு
Vaikunta Ekadasi: வருகிற டிசம்பர் 30, 2025 அன்று பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வு வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்கள்
திருச்சி, டிசம்பர் 25: வைகுண்ட ஏகாதசி (Vaikunta Ekadasi) வருகிற டிசம்பர் 30, 2025 அன்று இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வழிப்பட்டால் மோட்சத்தை அடையலாம் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோவில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் பரமப்பத வாசல் விழா எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வில் தமிழகத்தில் பிற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும் இதனை முன்னிட்டு கடந்த டிசம்பர் 19, 2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் ஜனவரி 9, 2026 அன்று நம்மாழ்வார் மோட்சம் அடைவது வரை நடைபெறும்.
இதையும் படிக்க : இந்த ரயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு OTP கட்டாயம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்த வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி டிசம்பர் 30, 2025 அன்று வரை நடைபெற உள்ளது. அன்றைய தினம் விரதம் இருந்து பரமத வாசல் திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனை முன்னிட்டு, நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலுக்கு வருகை தர உள்ளனர்.
பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, வைகுண்ட ஏகாதசி திருவிழா நாட்களில் சில ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி…ஒரு மாதத்துக்கு பிறகு தடை நீக்கம்…சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!
ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும் ரயில்களின் விவரம்
- சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (12633) ரயில் டிசம்பர் 29, 30, 31, 2025 தேதிகளில் இரவு 9.50 மணி முதல் 9.52 மணி வரை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்.
- கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (12634) ரயில் டிசம்பர் 28, 29, 30, 2025 தேதிகளில் அதிகாலை 12.53 மணி முதல் 12.55 மணி வரை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்.
- கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (16102) ரயில் டிசம்பர் 28, 29, 30, 2025 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.08 மணி முதல் 2.10 மணி வரை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்.
- சென்னை எழும்பூர் – கொல்லம் எக்ஸ்பிரஸ் (16101) ரயில் டிசம்பர் 29, 30, 31, 2025 ஆகிய தேதிகளில் இரவு 9.22 மணி முதல் 9.24 மணி வரை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்.
- சென்னை எழும்பூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (12693) ரயில் டிசம்பர் 28, 29, 30, 2025 ஆகிய தேதிகளில் அதிகாலை 12.12 மணி முதல் 12.14 மணி வரை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
- சென்னை எழும்பூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் ( 12693) டிசம்பர் 28, 29, மற்றும் 30, 2025 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.12 மணி முதல் 12.14 மணி வரை ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.