கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பெங்களூரு – கண்ணூருக்கு சிறப்பு ரயில்.. தமிழகம் வழியாக செல்கிறது.

Christmas Special Train From Bengaluru To Kannur | கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் நிலையில், பெங்களூரில் இருந்து கண்ணூருக்கு இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பெங்களூரு - கண்ணூருக்கு சிறப்பு ரயில்.. தமிழகம் வழியாக செல்கிறது.

மாதிரி புகைப்படம்

Published: 

24 Dec 2025 09:52 AM

 IST

சென்னை, டிசம்பர் 24 : கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் (Bengaluru) இருந்து கேரள (Kerala) மாநிலம் கண்ணூருக்கு (Kannur) சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் தமிழகம் வழியாக இயக்கப்படும் நிலையில், தமிழக மக்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு – கண்ணூர் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பியில் கூறியுள்ளதாவது, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கண்ணூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன என்று கூறியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு நாள் விடுமுறைக்கு ஊருக்கு சென்று வரும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இந்த சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து கண்ணூர் செல்லும் ரயில்

பெங்களூரில் இருந்து இன்று (டிசம்பர் 24, 2025) மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கண்ணூர் செல்லும் சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக அடுத்த நாள் (டிசம்பர் 25, 2025) காலை 7.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

இதையும் படிங்க : தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

கண்ணூரில் இருந்து பெங்களூரு செல்லும் ரயில்

பின்னர் மறுமார்க்கமாக கண்ணூரில் இருந்து நாளை (டிசம்பர் 25, 2025) காலை 10 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் ரயில், அடுத்த நாள் நள்ளிரவு 12.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும் என்று கூறப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், போக்குவரத்து சற்று கடினமானதாக மாறியுள்ளது. பேருந்து, ரயில்கள்  கிடைக்காமலும், அதிக கட்டணம் செலுத்தியும் பலர் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், இந்த சிறப்பு ரயில் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

கடத்தியவரின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தப்பித்த இளைஞர் - என்ன நடந்தது?
விமான நிலையங்களில் கைவிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் இளைஞர்
11 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுக்கும் வாடகையாளர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..