பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..

shocking incident in thiruvallur; உயிரிழந்த கணேசன் விலை உயர்ந்த இன்சூரன்ஸ் கட்டி வந்ததாக தெரிகிறது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் நடந்த சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் கணேசனின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர்.

பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..

பாம்பை கடிக்க வைத்து தந்தையை கொன்ற கொடூர மகன்கள்

Updated On: 

20 Dec 2025 13:00 PM

 IST

திருவள்ளூர், டிசம்பர் 20: திருவள்ளூர் அருகே ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணம் மற்றும் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு மகன்களே தந்தையைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியான் பாம்பை தூங்கி கொண்டிருந்த தந்தை மீது விட்டு கடிக்க வைத்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாள்களாக தனது மகன்களுக்காக பாடுபட்டு, தனது ஆசைகளை துறந்து சிறுக சிறுக சேமித்து வைத்து என பல தியாகங்களை செய்த தந்தைக்கு இறுதியில் அந்த மகன்களால் நேர்ந்த துயரம், யாருக்கும் நேரக்கூடாது ஒன்றாகும். பணத்திற்காக தந்தையையே நடந்த இந்த கொலை சம்பவம் மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது.

இதையும் படிங்க : திருச்சியில் கொடூர சம்பவம்…ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!

பாம்பு கடித்து மரணம்:

திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் போலீசிற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை நடத்திய இன்சூரன்ஸ் நிறுவனம்:

இதற்கிடையே, உயிரிழந்த கணேசன் விலை உயர்ந்த இன்சூரன்ஸ் கட்டி வந்ததாக தெரிகிறது. இதையொட்டி, அவரது குடும்பத்தினர் நடந்த சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் கணேசனின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர். அப்போது, குடும்பத்தினர் அனைவரும் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்ததால், அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தினர் மீது சந்தேகம்:

இதைத்தொடர்ந்து, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, கணேசன் பெயரில் பல உயர் மதிப்புள்ள இன்சூரன்ஸ் இருப்பது தெரியவந்தது.

இந்த இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுதற்காகவே, கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் ஆகியோர் மற்றும் நண்பர்கள் பாலாஜி (28), பிரசாந்த் (35), நவீன் குமார் (28), தினகரன் (28) ஆகியோருடன் இணைந்து, தந்தையை தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த கொலையானது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இருக்க வேண்டுமென அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பாம்பை விட்டு தந்தையை கடிக்க வைத்த மகன்கள்:

இதையடுத்து, பாம்பு பிடிக்கும் நபர்களிடம் இருந்து கொடி விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை வாங்கி வந்துள்ளனர். அதோடு, அதனை தூங்கி கொண்டிருந்த கணேசனின் கழுத்தில் கடிக்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அதோடு, கருணை அடிப்பைடியில் தந்தையின் அரசு வேலையை பெறவும், ரூ.3 கோடி மதிப்புள்ள அவரது இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவுமே நண்பர்களுடன் சேர்ந்த இந்த சதித்திட்டத்தை திட்டியதை மகன்மகள் ஒப்புக்கொண்டனர்.

இதையும் படிங்க : சாத்தான்குளத்தில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை…4 தனிப்படைகள் அமைப்பு…போலீசார் விசாரணை

இதைதொடர்ந்து, கணேசனின் மகன்கள் மோகன்ராஜ், ஹரிஹரன் உட்பட மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தையின் வேலை மற்றும் இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை கடிக்க வைத்து மகன்களே தந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பை எகிற செய்யும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் டிஸ்குளோசர் டே படம்
மார்பக புற்றுநோய்.. தழும்புகளை முதன்முறையாக வெளிப்படுத்திய ஏஞ்சலினா ஜோலி
பலத்த காற்றால் சாய்ந்த சுதந்திர தேவி சிலை - பிரேசிலில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்
கைலாச மலை – யாரும் ஏற முடியாத தீராத மர்மம்