சிவகங்கையில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்- எங்கெல்லாம் விடுமுறை?
School Leave : சிவகங்கை மாவட்டத்தில் மருது பாண்டியர் நினைவேந்தல் மற்றும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அக்டோபர் 27, 2025 மற்றும் அக்டோபர் 30, 2025 ஆகிய 2 தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, அக்டோபர் 22: சிவகங்கையில் (Sivaganga) மருதுபாண்டியர் நினைவேந்தல் மற்றும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை (Thevar Jayanthi) முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மருது பாண்டியர் குருபூஜை கடந்த அக்டோபர் 24, 2025 அன்று நடைபெற்ற நிலையில், மருது சகோதரர்களின் சமாதி அமைந்துள்ள காளையார்கோவில் பகுதியில் அக்டோபர் 27, 2025 அன்று நினைவேந்தல் நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் கலந்துகொள்வர். இதனை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அக்டோபர் 23, 2025 முதல் அக்டோபர் 31, 2025 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தின் 7 ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பாதுகாப்பு கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவங்கை மாவட்டத்தின் 7 ஒன்றிய பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை
வருகிற அக்டோபர் 27, 2025 மருது பாண்டியர் நினைவேந்தல் மற்றும் அக்டோபர் 30, 2025 அன்று நடைபெறவிருக்கும் தேவர் ஜெயந்தி ஆகியவற்றை சிவகங்கை மாவட்டத்தின் 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார். அதன் படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தேவர் ஜெயந்தி விழா – ராமநாதபுரத்தில் இந்த 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு
மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை
— PRO-Sivagangai District Collectorate (@SivagangaiDist) October 25, 2025
மருது பாண்டியர் நினைவேந்தல் அக்டோபர் 27, 2025 அன்று நடைபெறவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் இருந்து முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாய அமைப்பினர் பங்கேற்கவுள்ளனர். மக்கள் அதிக அளவில் இந்த நிகழ்வில் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அக்டோபர் 30, 2025 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 23, 2025 முதல் அக்டோபர் 31 வரை 1133 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகள் அமைப்பு
இதனையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தேவையில்லாமல் கூட்டம் கூடுவது, பேரணி, அரசியல் கூட்டம் நடத்துவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : பைக் டாக்ஸி புக் செய்த பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. சென்னையில் பகீர்!
மருது பாண்டியர் நினைவேந்தலுக்கு வருபவர்களை கண்காணிக்க, மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்துக்கு இடமான நபர்கள் மீது தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான 144 தடை அக்டோபர் 23, 2025 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



