SIR பணிகள் புறக்கணிப்பு.. அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை..

SIR Boycott: SIR பணிகள் காரணமாக, அனைத்து நிலை வருவாய் துறை ஊழியர்களும் கடுமையான பணிச்சுமை மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வலியுறுத்தி, இன்று முதல் — அதாவது நவம்பர் 18, 2025 முதல் — இந்தப் பணிகள் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SIR பணிகள் புறக்கணிப்பு.. அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை..

கோப்பு புகைப்படம்

Published: 

18 Nov 2025 08:41 AM

 IST

நவம்பர் 18, 2025: தமிழகத்தில் நவம்பர் 18, 2025 தேதியான இன்று முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் புறக்கணிக்கப்படும் என வருவாய் துறை ஊழியர் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் முதல் கட்டமாக பீகார் மாநிலத்தில் இந்த வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழலில், தமிழகம் உட்பட 12 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்புகள் இருந்தாலும், இந்தப் பணிகள் நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 97% படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடுமையான பணிச்சுமை – SIR பணிகள் புறக்கணிப்பு:

இந்தப் பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் ஒரு மாத கால அவகாசம் மட்டுமே வழங்கியுள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் இந்தப் பணிகள் 2025 நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். இந்தப் படிவங்களை பூர்த்தி செய்வதில் மக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக முதியவர்கள் படிவங்களை எவ்வாறு நிரப்புவது என்பது தெரியாமல் திணறுகின்றனர். இன்னும் 14 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது.

மேலும் படிக்க: கனமழை எச்சரிக்கை.. இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

97% படிவங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றை திரும்பப் பெறுவது நிலை அலுவலர்களுக்கு பெரும் சவாலாகியுள்ளது. இரவு–பகல் உள்ளீடாக, வார விடுமுறையின்றி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பணிகள் புறக்கணிக்கப்படும் என அறிவிப்பு:

இதுகுறித்து வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உரிய திட்டமிடல் இல்லாமல், சரியான பயிற்சி வழங்காமல், கூடுதல் பணியாளர்களை நியமிக்காமல், தேவையான நிதி ஒதுக்கீடு செய்யாமலும், இந்தப் பணிகளை அவசரகதியில் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஆலகால விஷத்தை கக்கும் நச்சுப்பாம்பு மல்லை சத்யா.. குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த வைகோ..

இதன் காரணமாக அனைத்து நிலை வருவாய் துறை ஊழியர்களும் கடுமையான பணிச்சுமை மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வலியுறுத்தி, இன்று முதல் — அதாவது நவம்பர் 18, 2025 முதல் — இந்தப் பணிகள் புறக்கணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த கடுமையான பணிச்சுமை காரணமாக பிற மாநிலங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் பணியாற்றிய நிலை அலுவலர்களான முகேஷ் மற்றும் அனீஸ் ஜார்ஜ் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இத்தகைய சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப் பணி நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை:

வருவாய் துறை ஊழியர் சங்க கூட்டமைப்பு புறக்கணிப்பை அறிவித்துள்ள நிலையில், அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணிச்சுமை அதிகமாக இருப்பதாக கூறி வேலை நிறுத்தம் செய்தால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.

துல்கர் சல்மானின் காந்தா படம் எப்படி இருக்கு?
பிளாஸ்டிக் பாத்திரங்களில் நிறைந்திருக்கும் அபாயம்
நியூயார்க்கை சுற்றி வரும் அனிருத் - காவ்யா மாறன்
ரஷ்யா கல்லூரியில் படிக்க விரும்புகிறீர்களா? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்கு தான்!