கல்லூரி மாணவிகள் செய்த பகீர் காரியம்.. சினிமா பாணியில் நடந்த துணிகரக் கொள்ளை.. திடுக் தகவல்!!

பாதிக்கப்பட்ட மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். அதன்படி, செல்போன் சிக்னல் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது.

கல்லூரி மாணவிகள் செய்த பகீர் காரியம்.. சினிமா பாணியில் நடந்த துணிகரக் கொள்ளை.. திடுக் தகவல்!!

மாதிரிப் புகைப்படம் (AI)

Updated On: 

28 Apr 2026 12:17 PM

 IST

ராமநாதபுரம், ஏப்ரல் 28: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கிராமத்தில், 86 வயது மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட 3 பேர் நகை பறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நரிப்பையூரைச் சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் (86), கடந்த 23-ஆம் தேதி தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு வந்து, வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இரு இளம் பெண்கள் உட்பட மூவர், மூதாட்டியிடம் தங்களுக்குக் குடிக்கத் தாகமாக இருப்பதாகக் கூறி, குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளனர்.

மேலும் படிக்க: விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!

மூதாட்டியிடம் நகை பறிப்பு:

அவர்களை நம்பிய மாரியம்மாள், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றார். அந்த சமயம் சற்றும் எதிர்பாராத விதமாக, மூதாட்டியைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த அந்த மர்ம கும்பல், திடீரென மாரியம்மாளின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவியுள்ளது.பின்னாடியே வந்த அந்த கும்பல் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியைத் தூவியுள்ளது. கண்ணெரிச்சலில் மூதாட்டி துடித்தபோது, சற்றும் இரக்கமில்லாமல் அந்த கும்பல் அவரைத் தாக்கியுள்ளது. பின்னர் அவர் அணிந்திருந்த 6 சவரன் தங்கச் சங்கிலி மற்றும் 1 சவரன் மோதிரம் என மொத்தம் 7 சவரன் தங்க நகைகளை அந்த கும்பல் பறித்துக்கொண்டு தப்பியோடியது.

போலீசார் விசாரணை மற்றும் கைது:

பாதிக்கப்பட்ட மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், சாயல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். செல்போன் சிக்னல் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், சந்தேகத்தின் பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தியபோது, நகை பறிப்பில் ஈடுபட்டது யார் என்பது தெரியவந்தது. அதன்படி, இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு கல்லூரி மாணவிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 25 வயது இளைஞர் ஒருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..

மீட்கப்பட்ட நகைகள்:

கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவர்கள் கொள்ளையடித்த நகைகளைத் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் அடகுக் கடையில் அடகு வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்து 7 சவரன் நகைகளையும் போலீசார் பத்திரமாக மீட்டனர். கல்வி கற்க வேண்டிய மாணவிகள், ஆடம்பர வாழ்க்கைக்காகத் திட்டமிட்டு குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக, மூதாட்டியை தாக்கி கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மூவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?