‘எதிரியா இருக்க தகுதி வேணும்’ அஜித் வசனத்தைச் சொல்லி விஜய்யை விமர்சித்த சீமான்!
Seeman criticized Vijay: விஜய் அரசியலுக்கு வந்த புதிதில் அவரது கொள்கை, கோட்பாட்டை பாராட்டி பேசி வந்த சீமான், பின்னர் விஜய் தனக்கு ஆதரவு தராத காரணத்தினால் கடும் விமர்சனங்களை வைக்க தொடங்கினார். அப்போது முதல் தவெகவினரும் சீமான், நாதகவினரை கடுமையாக விமர்சிக்க தொடங்க, இரு கட்சியினர் இடையேயும் விரோதம் நீடிக்கிறது.

விஜய் மற்றும் சீமான்
சென்னை, அக்டோபர் 26: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்ததை குறிப்பிட்டு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவ, விஜய் வீட்டை விட்டு வெளியே வந்து மக்களை சந்திப்பதற்கு தயங்குவதாக அவர் மீது சரமாரியான விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில், தற்போது அந்த விமர்சனங்களுக்கு மேலும் வலுசேர்ப்பது போல கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பித்தினரை நாளை சென்னையில் அவர் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கரூரில் கடந்த செப்.27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அந்த சமயத்திலையே அவர் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதலாக சம்பவ இடத்தில் இல்லாமல், சென்னை திரும்பியதாக விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்த அவர், அதனையும் நேரில் சந்தித்து கொடுக்காமல் வங்கிக் கணக்கில் செலுத்தி விமர்சனத்தை சந்தித்தார்.
Also read: விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் நல்லது: ராஜேந்திர பாலாஜி
இந்த சம்பவம் நடந்து நாளையுடன் 30 நாள் ஆக உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தற்போது வரை சந்திக்காத அவர், நாளை அவர்களை சென்னைக்கு வரவழைத்து தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். இவ்வாறு விஜய்யின் செயல்பாடுகள் அனைத்தும் களத்தில் இறங்கி தீவிரமா செயல்படும் அரசியல் தலைவர்களுக்கு வியப்பளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. விஜய் அரசியலுக்கு வந்தது முதலே வொர்க் ஃப்ரம் ஹோமில் இருந்து வருதாக விமர்சனங்களை எதிர்கொண்டார். இதைத்தொடர்ந்து, வாரத்தில் ஒருநாள் தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் சென்று வந்த அவர், கரூரில் நடந்த துயர சம்பவம் காரணமாக மீண்டும் முடங்கியுள்ளார்.
எதிரியாக இருக்க தகுதி தேவை:
இந்நிலையில், சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தவகெ தலைவர் விஜய்யை தான் எதிர்க்கவில்லை என்றும் எதிர்ப்பது என்றால் என்னவென்றே அக்கட்சியினருக்கு தெரியவில்லை எனவும் சாடியுள்ளார். தாங்கள் விஜய்யை நோக்கி சில கேள்விகளை முன்வைத்ததாகவும், அதற்கு பதில் தெரிந்தால் பதிலளிக்க வேண்டும். அதைவிடுத்து, தங்களை எதிர்ப்பதாக கூறுவது சரியில்லை என்றார். மேலும், தன்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் தனது எதிரியல்ல, தான் யாரை எதிர்க்கிறோனே அவனே தனது எதிரி என்றும் கூறினார். “எனக்கு நண்பனாக இருக்க தகுதி தேவையில்லை, எதிரியாக இருக்க நிறைய தகுதி தேவை” என அஜித்தின் வசனத்தை கூறியும் அவர் விஜய்யை சரமாரியாக விமர்சித்தார்.
Also read: சென்னைக்கு 790 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள புயல்.. 28 ஆம் தேதி தீவிர புயலாக கரையை கடக்கும்..
வீட்டில் தான் பனையூர் பஞ்சாயத்து:
அப்போது, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு அழைத்ததை குறிப்பிட்ட அவர், அப்படியென்றால், தேர்தலில் அனைத்து ஓட்டு பெட்டிகளையும் பனையூரில் கொண்டு வந்து வைக்க சொல்வீர்களா? என்றும் சாடினார். பண்ணையார் கூட பஞ்சாயத்துக்கு வருவார், ஆனால் பனையூர் பஞ்சாயத்து தனது வீட்டில் தான். ஆலமரத்திற்கு கூட வரமாட்டேன் என விஜய் உள்ளதாகவும், நாட்டாமையையும், தாண்டிய நாட்டாமையாக அவர் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.