Ramadan 2026: முதல் நோன்பு எப்போது? நகர வாரியான விவரங்கள்
Ramadan 2026 Update : இந்தியாவில் ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு வருகிற 2026 பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் நகரம் வாரியாக முதல் நோன்பு எப்போது கடைபிடிக்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் ரம்ஜான் பண்டிகைக்கான நோன்பு வருகிற 2026 பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் முஸ்லிம்கள் புனிதமாகக் கடைப்பிடிக்கும் இந்த மாதம் நோன்பு, தொழுகை, தியானம் மற்றும் ஆன்மீக சிந்தனைகளுக்கான காலமாகும். உணவுகளை தவிர்ப்பதற்கு அப்பாற்பட்டு, மக்கள் தங்களது நம்பிக்கையை புதுப்பித்து, தன்னடக்கம் வளர்த்து, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் காலமாகவும் ரம்ஜான் கருதப்படுகிறது. இந்த காலத்தில் கடுமையான நோன்பு இருந்து வழிபட்டால் தங்கள் நினைத்தது நடைபெறும் என்பது நம்பிக்கை. இந்த கட்டுரையில் இந்தியாவில் நகரம் வாரியாக முதல் நோன்பு எப்போது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இஸ்லாமிய சந்திர நாள்காட்டியின் 9வது மாதம் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் திருகுர்ஆன் அருளப்பட்டது என மக்களால் நம்பப்படுகிறது. 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும் இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலைக்கு முன்பாக ஸஹ்ரி உணவு எடுத்துக்கொள்வார்கள். அதன் பிறகு நோன்பு கடைபிடிக்கும் மக்கள் சூரியன் மறையும் நேரம் இப்தார் மூலம் நோன்பு திறக்கப்படும். பொதுவாக பேரீச்சமன்பழம் தண்ணீருடன் நோன்பு திறப்பது மரபாக உள்ளது. ஆனால் மக்கள் மேலும் சில உணவுகளையும் நோன்பு திறக்கும்போது எடுத்துக்கொள்கிறார்கள்.
இதையும் படிக்க : 13ம் தேதி வெள்ளிக்கிழமையின் மர்ம பயம்.. அலறும் மக்கள்.. என்னதான் நடந்தது?
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்கள், கர்ப்பமாக இருக்கும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு நோன்பு கடைபிடிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் மாதத்தில் தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறும்.
முதல் நோன்பு எப்போது?
ரம்ஜான் பண்டிகையின் தொடக்கம் பிறை காணப்படுவதன் அடிப்பைடையில் தீர்மாணிக்கப்படுகிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஒரு நாள் முன்பே நோன்பு தொடங்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் பிறை தெரியும் நாளின் அடுத்த நாள் முதல் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. பிப்ரவரி 19, 2026 அன்று நோன்பு என்றால் காலை 5.36 மணிக்கு நோன்பு கைடிபிடிக்கப்படும். நகரவாரியா முதல் நோன்பு திறக்கப்படும் நேரங்கள் குறித்து பார்க்கலாம்.
இதையும் படிக்க : இப்படி கனவுகள் வந்தால் குரு தோஷமாக இருக்கலாம்.. வியாழக்கிழமை பரிகாரம் இவைதான்!
- முதல் நாளில் டெல்லியை பொறுத்தவரை காலை 5.39 மணிக்கு நோன்பு துவங்கப்படுகிறது.
- அதே போல மாலை சரியாக 6.13 மணிக்கு இப்தார் நோன்பு திறக்கப்படும்.
- மும்பையில் காலை 05.52 மணிக்கு நோன்பு துவங்கி மாலை 06.40 மணிக்கு நோன்பு திறக்கப்படும்.
- கொல்கத்தாவில் காலை சரியாக 4.51 மணிக்கு நோன்பு துவங்கி மாலை 5.35 மணிக்கு நோன்பு திறக்கப்படும்.
- பெங்களூருவில் காலை 5.29 மணிக்கு நோன்பு துவங்கி, மாலை 6.27 மணிக்கு நோன்பு திறக்கப்படும்.
- ஹைதராபாத்தில் காலை 5.28 மணிக்கு நோன்பு துவங்கி, மாலை 6.19க்கு நோன்பு திறக்கப்படும்.
- சென்னையைப் பொறுத்தவரை காலை 5.18 மணிக்கு துவங்கி மாலை 6.16க்கு நோன்பு திறக்கப்படும்.
- லக்னோவை பொறுத்தவரை காலை 5.24 மணிக்கு துவங்கி மாலை 5.59 மணிக்கு நோன்பு திறக்கப்படும்.
- கான்பூரில் காலை 5.25க்கு நோன்பு துவங்கி மாலை 6.03 மணிக்கு நோன்பு திறக்கப்படும்.
- ராஞ்சியில் காலை 5.04 மணிக்கு துவங்கி, மாலையில் 5.45 மணிக்கு நோன்பு திறக்கப்படும்.
- அகமதாபாத்தில் காலை 5.55 மணிக்கு நோன்பு துவங்கி, காலை 6.37 மணிக்கு நோன்பு திறக்கப்படும்.
- சூரத்தில் காலை 5.53 மணிக்கு நோ்பு திறக்கப்பட்டு, மாலை 6.38 மணிக்கு நோன்பு திறக்கப்படும்.
- புனேவில் காலை 5.47 மணிக்கு துவங்கி மாலை 6.37 மணிக்கு நோ்பு திறக்கப்படும்.