போராட்டம் எதிரொலி: தமிழ்நாட்டில் இன்று பேருந்து, ஆட்டோ இயங்குமா?

Nationwide Strike July 9: இன்று ஜூலை 9-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து, வங்கி சேவைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

போராட்டம் எதிரொலி: தமிழ்நாட்டில் இன்று பேருந்து, ஆட்டோ இயங்குமா?

வேலைநிறுத்த போராட்டம்

Published: 

09 Jul 2025 08:10 AM

சென்னை ஜூலை 09: மத்திய தொழிற்சங்கங்கள் (Central Trade Unions) வலியுறுத்தும் 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு 2025 ஜூலை 9-ஆம் தேதி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்தம் (Nationwide strike  நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர் சங்கம் தொ.மு.ச., சி.ஐ.டி.யு. (Centre of Indian Trade Unions) உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காத நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது. வங்கிகள் மற்றும் தபால்களும் இயங்காது. அரசு ஊழியர்கள் பங்கேற்றால் சம்பள நிறுத்தம், ஒழுங்கு நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடைகள் வழக்கம் போல் இயங்கும் என வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

17 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தும் வேலைநிறுத்தம்

நாடு முழுவதும் 2025 ஜூலை 9-ஆம் தேதி இன்று மத்திய தொழிற்சங்கங்களின் அழைப்பில் பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது. விலைவாசி கட்டுப்பாடு, குறைந்தபட்ச ஊதிய உயர்வு, பொதுத் துறை நிறுவனங்களின் தனியார்மயமாதலை நிறுத்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்தல், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொழிற்சங்கங்கள் ஆதரவு

இந்த வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாட்டில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து, வங்கி, வருவாய்த்துறை ஊழியர்களும் இதில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர்.

Also Read: திமுக ஆட்சியில் 4.38 லட்சம் கோடி ரூபாய் கடன் – கோவை பிரச்சார பயணத்தில் எடப்பாடி பழனிசாமி..

போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் சூழல்

வேலைநிறுத்த போராட்டத்தில் பல தொழிற்சங்கங்கள் பங்கேற்பதால், பொதுமக்களுக்கு முக்கியமான போக்குவரத்து மற்றும் நிதிச் சேவைகள் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. போக்குவரத்து துறையைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்கும் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படாமல் இருக்கலாம்.

மேலும், சி.ஐ.டி.யு. உள்ளிட்ட சங்கங்களில் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமானதால், பெரும்பாலான ஆட்டோக்களும் இயங்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பஸ்கள் இயங்காது என தெரிகிறது. சி.ஐ.டி.யுவின் கீழ் அதிகமான ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளதால் பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடாது. தொழிற்சங்கங்களின் அறிவுறுத்தலின்படி, இன்று பஸ்கள், ஆட்டோக்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும்.

வங்கிகள், தபால்கள், கிராமப்புற தொழிலாளர்கள் பங்கேற்பு

வங்கிகள் இயங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

கடைகள் இயங்கும் – வணிகர் சங்கம்

தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இந்த போராட்டத்தில் பங்கேற்காது. எனவே கடைகள் வழக்கம் போல் இயங்கும் என அதன் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.