இன்ஸ்பெக்டர் வீட்டில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த போலீஸ்.. அதிரடி கைது!

Police Shot Video Of Young Woman Bathing | கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டர் ஒருவரின் கார் ஓட்டுநராக உள்ள காவலர் ஒருவர், இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்துக்கொண்டு இருந்த இளம் பெண்ணை மறைந்து இருந்து வீடியோ எடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் வீட்டில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த போலீஸ்.. அதிரடி கைது!

மாதிரி புகைப்படம்

Published: 

23 Dec 2025 08:48 AM

 IST

கோயம்புத்தூர், டிசம்பர் 23 : கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் ஓட்டுநராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாதவ கண்ணன் என்ற 27 வயது நபர் பணியாற்றி வந்துள்ளார். இவர் இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினர் ஒருவரை போல பழகி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த இன்ஸ்பெக்டர் தனது மகள்களை கவனித்துக்கொள்ள உறவுக்கார பெண் ஒருவரை தனது வீட்டில் வேலைக்காக வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக வேலை பளு காரணமாக இன்ஸ்பெக்டரால் தனது வீட்டிற்கு செல்ல முடியாத நிலையில், பாதுகாப்புக்காக ஓட்டுநரை மட்டும் அவர் தனது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த போலீஸ்

இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் கூறியப்படியே மாதவகண்ணன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் இன்ஸ்பெக்டர் தனது மகள்களை பாதுகாப்பதற்காக வேலைக்கு வைத்திருந்த இளம் பெண் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளார். அதனை கண்ட அந்த பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து உடனடியாக இன்ஸ்பெக்டரை தொடர்ப்புக்கொண்டு அழுதுக்கொண்டே அனைத்தையும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வீடற்றோர்களுக்கு இரவு நேர காப்பகம்.. 15 அத்தியாவசிய பொருட்கள் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

அதிரடியாக கைது செய்த போலீஸ்

இந்த சம்பவம் குறித்து உடனடியாக மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆதாரங்களின் அடிப்படையில், இன்ஸ்பெக்டரின் ஓட்டுநரான காவலர் மாதவ கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க் : புத்தாண்டு கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு நோ எண்ட்ரி.. மீறினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்களை ஆபத்து மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து பாதுகாக்க தான் காவல்துறை உள்ளது. ஆனால், அத்தகைய காவல்துறையே பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை செய்வது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே பெண் குளிப்பதை மற்றொரு காவலர் வீடியோ எடுத்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபர் வீட்டில் சிக்கிய விலையுயர்ந்த கார்கள் - அமலாக்கத்துறை தீவிர விசாரணை
துணிச்சலாக செயல்பட்டு பலரின் உயிரைக் காப்பாற்றிய நபர் - ரூ.14 கோடி நிதியுதவி
சமந்தாவின் புத்தாண்டு தீர்மானங்கள் என்ன தெரியுமா?
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கான பெயர் பரிந்துரை