தனிக்கட்சி தொடங்குவதாக நான் கூறவே இல்லை…ஓபிஎஸ் அந்தர் பல்டி!

Ops Meet Amit Shah: டெல்லியில் உள்துறை அமித் ஷாவுடனான சந்திப்பு விவகாரம் தொடர்பாகவும், நான் தனிக் கட்சி தொடங்குவதாக எந்த சூழ்நிலையிலும் கூறவில்லை என்று அ தி மு க ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தனிக்கட்சி தொடங்குவதாக நான் கூறவே இல்லை...ஓபிஎஸ் அந்தர் பல்டி!

நான் தனிக்கட்சி ஆரம்பிக்கிறேனா

Published: 

05 Dec 2025 12:26 PM

 IST

அதிமுகவில் ஏற்பட்ட கட்சி பூசல் காரணமாக அந்த கட்சியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியேறி அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கினார். இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ஓ பன்னீர்செல்வம் அண்மையில் வந்திருந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட நிலையில், அதற்கான அனுமதி கிடைக்காதது, உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாதது என்பன உள்ளிட்ட காரணங்களால் அந்தக் கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். இதனிடையே, அவர் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக தெரிவித்திருந்தார். அதற்கான அறிவிப்பை வரும் டிசம்பர் 15- ஆம் தேதி தெரிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அமித் ஷாவுடன் பேசியது என்ன

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். அங்கே மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை ஓ. பன்னீர் செல்வம் சந்தித்திருந்தார். இந்த நிலையில், தமிழகம் திரும்பிய ஓ. பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாதவது: மறைந்த முன்னாள் முதல்வர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா எதற்காக அதிமுகவை ஆரம்பித்து அதனை உச்சத்தில் வைத்தார்களோ அதே நிலையில் அதிமுக தொடர வேண்டும் என்பதை அடிப்படை தொண்டனின் எண்ணமாகும்.

மேலும் படிக்க: “மதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது…?” திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து!!

எம்ஜிஆரின் இயக்கம் எந்த சூழ்நிலையிலும் பிளவு படாது

தவெகவில் இணைந்த செங்கோட்டையனிடம் நான் பேசவும் இல்லை. அவர் என்னிடமும் பேசவில்லை. எனது அடுத்த கட்ட நகர்வு அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் எண்ணத்தின் அடிப்படையில் இருக்கும். ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் எந்த கட்சியிலும் இணையலாம். எம்ஜிஆரின் இயக்கம் எந்த சூழ்நிலையிலும் பிளவுபடாது.

தனிக்கட்சி தொடங்குவதாக நான் கூறவில்லை

பிரிந்து கிடக்கும் அதிமுகவின் சக்திகள் ஒன்று பட வேண்டும் என்பதற்காகவே நான் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தினேன். அதிமுக தொண்டர்களின் எண்ணத்தையும் அவரிடம் எடுத்துக் கூறினேன். அப்போது, அவர் என்னிடம் அன்பான வார்த்தைகளை கூறி அனுப்பி வைத்தார். வரும் 15- ஆம் தேதி தனிக் கட்சி தொடங்க இருப்பதாக என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி ஆரம்பிப்பதாக கூறவில்லை. எனவே இந்த கேள்வியை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் ரூ.1,003 கோடியில் கண்ணாடி உற்பத்தி ஆலை…முதல்வர் தொடங்கி வைப்பு…800 பேருக்கு வேலைவாய்ப்பு!

Related Stories
5 பவுன் நகைக்காக வரதட்சணை கொடுமை…கணவரே ஆபாச படம் எடுத்து மிரட்டல்…இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!
சென்னையில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம்…காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
திருவனந்தபுரம்-தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவை…நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
நாய் கடிக்கு ஆளான சிறுவன்..பெற்றோரிடம் மறைத்ததால் விபரீதம்…3 மாதங்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்!
கையெழுத்தாகும் பாஜக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம்.. பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?
தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறது ஏர் இந்தியா நிறுவனம்…சென்னை-துபாய் விமான சேவை நிறுத்தம்…என்ன காரணம்?
இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?