ஊட்டியில் 4 டிகிரி செல்சியஸ்.. தொடரும் உறைபனி.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: அதிகாலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் சூழலில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் ஒரு சில இடங்களில் உறைப்பனி தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த உறைப்பனியை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

ஊட்டியில் 4 டிகிரி செல்சியஸ்.. தொடரும் உறைபனி.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?

கோப்பு புகைப்படம்

Published: 

27 Dec 2025 06:15 AM

 IST

வானிலை நிலவரம், டிசம்பர் 26, 2025: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தர்மபுரி மற்றும் நாகை மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. ஏனைய தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த சூழலில், கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து, பனிமூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், ஊட்டியில் 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம்… எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை… புதுச்சேரி அரசு விதித்த கட்டுப்பாடுகள்

அதிகாலை நேரங்களில் தொடரும் பனிமூட்டம்:

அதிகாலை நேரங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் பனிமூட்டம் காணப்படும் சூழலில், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் ஒரு சில இடங்களில் உறைப்பனி தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த உறைப்பனியை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அதேபோல், வரக்கூடிய நாட்களிலும் உறைப்பனி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

டிசம்பர் 29ஆம் தேதி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், டிசம்பர் 30ஆம் தேதி தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: டேனிஷ் கோட்டையில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் மாயம் – அதிர்ச்சி தகவல்

மேலும், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், பகல் நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தாவுக்காக ஏர்போர்ட்டில் காதலுடன் காத்திருந்த ராஜ்..... வைரலாகும் வீடியோ
இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் சாதனையுடன் பாக்ஸ் ஆபிஸ் அதிர வைத்த துரந்தர் படம்..
அதிகமாக சாப்பிட்ட வருங்கால மனைவி.. நஷ்ட ஈடு வழங்க தொடுத்த வழக்கு..
ஜப்பானில் கடைப்பிடிக்கப்படும் மெட்டபாலிக் லா.. அப்படி என்ன சட்டம் இது?