விஜய் குறித்த கேள்வி…டென்ஷனான சீமான்…அடுத்து நடந்தது என்ன!
Seeman Tenses Over About Tvk Leader Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திடீர் டென்ஷன் ஆனார். மேலும், அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் .

விஜய் குறித்த கேள்வியால் சீமான் டென்ஷன்
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறப்பு வாக்காளர் திருத்தம் என்று கூறிவிட்டு ஒரு கோடி வாக்காளர்களை நீக்குவதை எப்படி ஏற்க முடியும். தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அதற்குள் எப்படி வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள முடியும். பீகாரில் அதிக அளவு இஸ்லாமியர்களின் வாக்கு பறிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக இல்லாத வாக்குகளை நீக்கி உள்ளனர். இதே போல, தமிழகத்திலும் பாஜகவுக்கு ஆதரவு இல்லாத 40 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. இறந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் வாக்குகள் உள்ளோரின் பெயர்கள் நீக்கப்படலாம்.
தேர்தல் ஆணையத்தின் பொறுப்பற்ற செயல்
ஆனால், உயிருடன் இருப்பவர்களின் வாக்குகளும் நீக்கப்பட்டதுடன், அவர்களை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரின் பெயர் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது, தேர்தல் ஆணையத்தின் பொறுப்பற்ற செயல்களை காண்பிக்கிறது. முந்தைய காலத்தில் வாக்காளர்கள் தங்களது ஆட்சியாளர்களை தேர்வு செய்தனர்.
மேலும் படிக்க: தமிழக மக்களை எந்த சக்தியாலும் பிளவு படுத்த முடியாது…அமைச்சர் சேகர்பாபு!
விஜய் குறித்த கேள்வியால் சீமான் டென்ஷன்
தற்போது, ஆட்சியாளர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்வு செய்கின்றனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் களத்துக்கு வராமல், களத்தைப் பற்றி பேசுகிறார். விக்கிரவாண்டி மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இதை ஏன் போட்டியிடவில்லை. கொள்கை எதிரி பாஜகவை வீழ்த்துவதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. எனவே, விஜய் கூறுவதை கேட்டுவிட்டு சிரித்து விட்டு சென்று விட வேண்டும்.
தமிழகத்தில் பண நாயகம் தான் உள்ளது
வாக்குகளையும், தொகுதிகளையும் விலை கொடுத்து வாங்கும் நிலை இருக்கும் வரை ஜனநாயகம் இருக்காது. பணநாயகம் தான் இருக்கும். கல்லீரல் திருட்டு விவகாரத்தை முறைகேடு என்று கூறினர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை வாக்காளர் உரிமைத் தொகை என்று கூறினர். இலவசத்தை விலை இல்லா என்று பெயர் மாற்றினர். இதே போல, 100 நாள் வேலை திட்டத்தின் பெயரையும் மாற்றி உள்ளனர்.
உரிமைத் தொகை மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டம்
பாஜக ரூ. 3000 கோடிக்கு எதற்காக வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தது. இதே மகாத்மா காந்திக்கு எதற்காக சிலை வைக்கவில்லை. எனவே, மற்ற கட்சிகளை கேள்வி எழுப்பும் போது பாஜக தன் நிலையில் சரியாக இருக்க வேண்டும். குடும்ப தலைவிக்கு உரிமை தொகை அதிகரிக்கப்பட்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பாம்பை கடிக்க விட்டு தந்தையை கொன்ற கொடூர மகன்கள்.. அரசு வேலை, ரூ.3 கோடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மாஸ்டர் பிளான்..