நவ. 21 வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ. 16 முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..

North East Monsoon: நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறட்சியான வானிலையே நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது வரை நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு, இயல்பான அளவைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சூழலில், வடகிழக்கு பருவமழை வரக்கூடிய நவம்பர் 16, 2025 முதல் மீண்டும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ. 21 வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. நவ. 16 முதல் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை..

கோப்பு புகைப்படம்

Published: 

14 Nov 2025 06:15 AM

 IST

வானிலை நிலவரம், நவம்பர் 13, 2025: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16, 2025 அன்று தொடங்கியது. அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு இருந்தது. ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வறட்சியான வானிலையே நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது வரை நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ள மழையின் அளவு, இயல்பான அளவைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற சூழலில், வடகிழக்கு பருவமழை வரக்கூடிய நவம்பர் 16, 2025 முதல் மீண்டும் தீவிரமடையக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 16 ஆம் தேதி முதல் கொட்டப்போகும் மழை:

அதே சமயத்தில், நவம்பர் 16, 2025 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், நவம்பர் 17, 2025 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கரூர் வழக்கு… மின் தடை ஏற்படுத்தப்பட்டதா? மின்வாரிய ஊழியர்களிடம் சிபிஐ விசாரணை

நவம்பர் 18, 2025 அன்று தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நவம்பர் 19 அன்று கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் தொடரும் மழை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: புதுக்கோட்டையில் திடீரென சாலையில் தரையிறங்கிய விமானம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி – என்ன நடந்தது?

சென்னையைப் பொறுத்தவரையில், நவம்பர் 13, 2025 காலை முதல் தற்போது வரை நகரின் பல பகுதிகளில் விட்டு விட்டு அவ்வப்போது மிதமான மழையும் கனமழையும் பதிவாகி வருகிறது. இதனால் வெப்பநிலையின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி:

இது ஒரு பக்கம் இருக்க, வரக்கூடிய நவம்பர் 21, 2025 அன்று வங்கக்கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், இது புயலாக மாறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், நவம்பர் 17 முதல் நவம்பர் 28 வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பதிவாகக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories