திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது…செந்தில் பாலாஜி!
DMK Mla Senthil Balaji: தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியிலில் இருக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். அவர், தமிழக வெற்றிக் கழகத்தை மறைமுகமாக விமர்சித்து இந்த வார்த்தையை கூறினார் .

Senthil Balaji mla
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் திமுக சார்பில் வருகிற டிசம்பர் 29- ஆம் தேதி மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் கோவை மாவட்டத்திலிருந்து 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தகுதியான நபர்கள் யாரேனும் விடுபட்டுள்ளனரா எனவும், தகுதி இல்லாத நபர்கள் யாரேனும் அதில் இடம்பெற்றுள்ளனரா என பூத் வாரியாக ஆராய்ந்து அது தொடர்பான ஆட்சேபனைகளை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளோம். என்னை பொறுத்தவரை வரைவு வாக்காளர் பட்டியலில் உயிரிழந்தவர்கள் மற்றும் ஓரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாறியவர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
கடந்த இரு தேர்தலில் பதிவான வாக்குகள்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. எவ்வளவு வாக்குகள் பதிவாகவில்லை என்பதை ஆராய்ந்து பார்த்தால் அதில் எத்தனை பேர் நீக்கப்பட்டுள்ளனர், எதற்காக நீக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வரும். வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எந்த ஆண்டு சேர்க்கப்பட்டனர் என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: திமுக அரசுக்கு சாவு மணி அடித்து விட்டது…இணையமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!
திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும்…
ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக தான் ஆட்சியில் இருந்து வந்த நிலையில், அப்போதெல்லாம் கள்ள ஓட்டுகள் இருப்பதாக அவர்களுக்கு தெரியவில்லையா. அல்லது தெரிந்தும் தெரியாமல் இருந்தனரா. தமிழகத்தில் திமுகவை விமர்சிக்காமல் எந்த கட்சியும் அரசியலில் இருக்க முடியாது. திமுகவை விமர்சித்தால் தான் களத்தில் இருக்க முடியும் என்ற கட்டாயத்துக்கு அனைத்து கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் திமுக வெற்றி உறுதி
தமிழகத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் திமுகவை விமர்சித்து வருகின்றன. அந்த அளவுக்கு வலுவான அரசாகவும், நல்லாட்சியை வழங்கும் அரசாகவும் திமுக அரசு உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பதிவு செய்யும். கோவை மாவட்டத்தில் குறைந்தது 10 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்.
கோவை தொகுதியில் போட்டியா
நான் கரூர் தொகுதியை விட்டுவிட்டு கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் சில செய்திகளை பார்த்தேன். கடந்த 5 தேர்தல்களில் கரூர் மக்களும், கரூர் தொகுதியும் என்னை வெற்றி பெற வைத்துள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்க தவெக திட்டம்… விஜய்யுடன் செங்கோட்டையன் ஆலோசனை!!