விஜய்க்கு ஆதரவாக பேசியதால் நிராகரித்தார்கள்.. என் வயிற்றில் அடிப்பது போல… தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் பரபரப்பு குற்றச்சாட்டு
TVK Vijay : விஜய் முன்னிலையில் பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விஜய்க்கு ஆதரவாக பேசியதால் தான் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

விஜய் - நாஞ்சில் சம்பத்
சென்னை, டிசம்பர் 5 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. இந்த முறை தேரத்திலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) முதன்முறையாக களமிறங்குகிறது. தமிழக அரசியலில் பெரும்பாலும் இருமுனை போட்டி நிலவும் நிலையில், 3வதாக தவெக தனது தடத்தை அழுத்தமாக பதிவு செய்ய காத்திருக்கிறது. அதற்கு ஏற்ப விஜய் (Vijay) தனது கட்சியை வலுவாக்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அதிமுக எம்எல்ஏவும் கொங்கு மண்டலத்தின் முகமாக விளங்கியவருமான செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
தவெகவில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார் அவருக்கு அங்கு அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. அவரது வருகை கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் டிசம்பர் 5, 2025 அன்று தவெகவில் இணைந்துள்ளார்.
இதையும் படிக்க : “அமித்ஷா அழைத்தாலும் செல்ல மாட்டேன்”.. டிடிவி தினகரன் திட்டவட்டம்!!
தவெக மீதான அரசியல் விமர்சஙகர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கட்சிக்காக ஊடகங்களில் பேச சரியான பேச்சாளர்கள் இல்லை என்பது தான். அதற்கு பதிலளிக்கும் விதமாக அவரது வருகை அமைந்துள்ளது. தமிழக அரசியலில் நாஞ்சில் சம்பத் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் அவரது பேச்சு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரது அனுபவம் தவெகவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவெகவில் நாஞ்சில் சம்பத்
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்.
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார் pic.twitter.com/5YcFFa98GN
— VTL Team (@VTLTeam) December 5, 2025
கடந்த 6 ஆண்டு காலம் எந்த அரசியல் கட்சியிலும் என்ன இணைத்துக்கொள்ளாமல், திராவிட இயக்கத்தின் சொற்பொழிவாளர் என்று சொல்லி, பெரியார் அண்ணாவின் லட்சியங்களை பேசி வந்த நான், தற்போது தவெகவில் இணைத்துக்கொண்டு தவெகவின் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள விஜய் என்னை அழைத்திருக்கிறார். அவர் என் ரசிகர் என சொன்னபோது நான் மெய் சிலித்துப்போனேன். கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, குமுதம் இணையத்துக்கு நான் அளித்த பேட்டியில் தவெகவுக்கு ஆதரவாக பேசினேன்.
இதையும் படிக்க : தனிக்கட்சி தொடங்குவதாக நான் கூறவே இல்லை…ஓபிஎஸ் அந்தர் பல்டி!
அந்த நாளில் இருந்து அறிவாலயத்தில் இருந்து என்னை வசை மாறி பொழிந்தார்கள். தஞ்சை மாவட்டத்தில் நான் கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். திமுகவில் நான் சைக்கிள் கூட கேட்கமாட்டேன். கேட்டாலும் கிடைக்காது. ஏதோ 4 நிகழ்ச்சிகளில் பேசி, என் நாட்களை நகர்த்தலாம் என்று பார்த்தால், என் வயிற்றில் அடிப்பது போல என் நிகழச்சிகளை ரத்து செய்தார்கள். தற்போது தவகவில் இணைந்த பிறகு புதிதாய் பிறந்தவனைப் போல பூரிக்கிறேன் என்றார்.