ரூ. 5300 கோடி மதிப்பீட்டில் புதிய டயர் தொழிற்சாலை.. தமிழக அரசுடன் எம்.ஆர்.எஃப் நிறுவனம் ஒப்பந்தம்..

தமிழ்நாட்டின் உற்பத்தி வலிமைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5,300 கோடி முதலீட்டில் ஒரு புதிய டயர் உற்பத்தி வசதியை நிறுவவும், சுமார் ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் எம்ஆர்எப் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்துள்ளார்.

ரூ. 5300 கோடி மதிப்பீட்டில் புதிய டயர் தொழிற்சாலை.. தமிழக அரசுடன் எம்.ஆர்.எஃப் நிறுவனம் ஒப்பந்தம்..

கோப்பு புகைப்படம்

Published: 

04 Mar 2026 18:03 PM

 IST

சென்னை, மார்ச் 4, 2026: தமிழகத்தில் புதிய டயர் தொழிற்சாலை அமைப்பதற்காக ரூ.5,300 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் எம்ஆர்எப் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதிய தொழிற்சாலை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசு தரப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் வியட்நாம் கார் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் இந்த டயர் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது.

5,300 கோடி மதிப்பீட்டில் டயர் தொழிற்சாலை:

எம்ஆர்எப் நிறுவனம் இந்தியாவில் 10 இடங்களில் தனது ஆலைகளை நிறுவியிருந்தாலும், தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் — அதாவது திருவொற்றியூர், அரக்கோணம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் — தனது உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது.

ரூ.5,300 கோடி முதலீடும், ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இந்த திட்டம் அமைகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

1000 பேருக்கு வேலைவாய்ப்பு:

அதில், “தமிழ்நாட்டின் உற்பத்தி வலிமைக்கு ஒரு பெரிய ஊக்கமாக, சிவகங்கை மாவட்டத்தில் ரூ.5,300 கோடி முதலீட்டில் ஒரு புதிய டயர் உற்பத்தி வசதியை நிறுவவும், சுமார் ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நமது தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் எம்ஆர்எப் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.

மேலும் படிக்க: உறுதியான திமுக காங்கிரஸ் கூட்டணி.. எத்தனை இடங்கள் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்..

மேலும், கடல் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளை உள்ளடக்கிய ஒரு வலுவான கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், தமிழ்நாட்டை உலகளாவிய நீலப் பொருளாதாரத்தில் முன்னணி மையமாக நிலைநிறுத்தவும் ‘தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை 2026’-ஐயும் வெளியிட்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எம்ஆர்எப் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வாகன டயர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புகளுக்காக கிரீன் பீல்ட் உற்பத்தி வசதியை அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?
ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?
DMK Exit Poll Results: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!
Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!
புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வரலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தவெக வேட்பாளர்களுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை.. பேசப்படும் விஷயங்கள் என்ன?
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..