ஈரான் போரால் மூலப்பொருட்கள் விலை உயர்வு.. தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்.. 5 லட்சம் பேரின் வேலை பாதிப்பு..

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தீப்பெட்டி மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் போரால் மூலப்பொருட்கள் விலை உயர்வு.. தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்.. 5 லட்சம் பேரின் வேலை பாதிப்பு..

தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடல்

Published: 

07 Apr 2026 08:27 AM

 IST

ஈரான் போரால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து இருப்பதால் தீப் பெட்டி தொழிற்சாலைகள் வருகிற 12ம் தேதி முதல் மூடப்படுகிறது. இதனால் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கோவில்பட்டி, சங்கரன்கோவில், திருவேங்கடம், சாத்தூர், சிவகாசி, குடியாத்தம், காவேரிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 50 முழு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 320 பகுதி எந்திர தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் ஆலைகளும் இயங்கி வருகின்றன. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவற்றில் 90 சதவீதம் பெண்கள் அடங்குவார்கள்.

இதையும் படிக்க: “காற்றில் கூட ஊழல் செய்கின்ற ஒரே கட்சி”.. திமுக மீண்டும் தொடர வேண்டுமா? இபிஎஸ் சரமாரி தாக்கு!!

மூலப்பொருட்கள் விலை உயர்வு:

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக தீப்பெட்டி மூலப்பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டு உள்ளது.

அதாவது மெழுகு, அட்டை, பாலித்தீன் பைகள் ஆகியவை ஈரானில் இருந்து தான் வந்து கொண்டிருந்தது. போர் காரணமாக அவை வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மூலப்பொருட்களை இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் போரை காரணம் காட்டி விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர். கடந்த சில மாதங்களாக ரூ.80-க்கு விற்பனையான ஒரு கிலோ மெழுகு இப்போது ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் தீப்பெட்டி பண்டல்கள் பேக்கிங்கிற்கு தேவையான பாலித்தீன் பைகள் ரகவாரியாக ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்து உள்ளது. பாஸ்பரஸ், குளோரைடு, பேப்பர், அட்டை என அனைத்து மூலப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து இருப்பதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் நிலை உள்ளது.

இதையும் படிக்க: சாத்தான்குளம் லாக்அப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உள்பட 9 போலீசாருக்கு உச்சபட்ச தண்டனை!

2 வாரங்கள் தொழிற்சாகளை மூடல்:

இதன் காரணமாக தொடர்ந்து தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டு இருப்பதால் வருகிற 12-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 2 வாரங்கள் தீப்பெட்டி ஆலைகளுக்கு விடுமுறை விட்டு மூடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் பா.பரமசிவம் தெரிவித்தார்.

Follow Us
2 அணுகுண்டு தாக்குதல்களுக்கு பிறகும் உயிர் பிழைத்த மனிதர் - எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள்
காசாவில் போர் எதிரொலி - பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்தும் குழந்தைகள் - மனதை உலுக்கும் காட்சி
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நான் நடிக்க மாட்டேன் - ஆண்ட்ரியா அதிர்ச்சி தகவல்
நண்பரை கொலை செய்த நபர் - பேய் பயம் காரணமாக போலீசில் சரண்