உணவகத்திற்கு வரும் பெண்கள், சிறுமிகளை புகைப்படம் எடுத்த ஊழியர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
Man Secretly Filmed Women And Girl Children | சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், அந்த உணவகத்திற்கு வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளை ரகசியமாக புகைப்படம் எடுத்து ரசித்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
புதுவண்ணாரப்பேட்டை, மார்ச் 04 : சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் காசிமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவரது மனைவியை அந்த உணவகத்தில் வேலை செய்யும் ஜானகிராமன் என்ற 29 வயது ஊழியர் ஒருவர் ரகசியமாக புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அந்த பெண்ணின் கணவர் கவனித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த ஊழியரின் செல்போனை பிடுங்கி பார்த்தபோது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
ஓட்டல் ஊழியரின் செல்போனில் 200-க்கு மேற்பட்ட பெண்களின் புகைப்படங்கள்
அந்த நபர் உணவக ஊழியர் தனது மனைவியை புகைப்படம் எடுத்த ஆத்திரத்தில் அவரிடம் சென்று செல்போனை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் உதவியுடன் அந்த நபரின் செல்போனை பிடுங்கி அவர் பார்த்துள்ளார். அப்போது அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். அதாவது அந்த ஊழியரின் செல்போனில் அந்த நபரின் மனைவியின் புகைப்படம் மட்டுமன்றி, அந்த உணவகத்திற்கு வந்துச் சென்ற ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்கள் இருந்துள்ளன.
இதையும் படிங்க : படு வேகமாக பரவும் பறவை காய்ச்சல்… 14 மாவட்டங்களில் பாதிப்பு… சுகாதாரத்துறை விடுத்த அலர்ட்!
ஓட்டல் ஊழியருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
அவரது செல்போனில் இருந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உணவக ஊழியர் ஜானகிராமனை பிடித்து அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். பிறகு அவரை அருகில் இருந்த புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜானகிராமன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க : தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு… செம குஷியில் கட்சியினர்… எம்.பி. ஆகிறாரா எல்.கே.சுதீஷ்?
அப்போது அந்த நபர் உணவகத்திற்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளை புகைப்படம் எடுத்து தனிமையில் பார்த்து ரசித்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜானகிராமனை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.