விருப்பமனு தாக்கல் செய்ய ரூ.50,000 – மக்கள் நீதி மய்யம் நிர்ணயித்த கட்டணம்
MNM Election Update : கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜனவரி 24, 2026 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் செய்ய கட்டணமாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன்
சென்னை, ஜனவரி 24 : தமிழ்நாட்டின் அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், கமல்ஹாசன் (Kamal Haasan) தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி முக்கிய அரசியல் முடிவுகளை எடுத்துள்ளது. கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை (Assembly Election) முன்னிட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், ஜனவரி 24, 2026 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்டணமாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலககத்தில் ஜனவரி 24, 2026 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் தீர்மானமாக, 2026 சட்டமன்றத் தேர்தலை டார்ச் லைட் சின்னத்தின் கீழ் எதிர்கொள்ள வேண்டும் என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தேர்தல் ஆணையம் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் கமல்ஹாசன் அமைத்துள்ள தேர்தல் பணிக்குழுவின் உறுப்பினர்களை உறுதிப்படுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிக்க : அதிமுகவில் இணைகிறார் தர்மர் எம்.பி…காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!
விண்ணப்ப கட்டணமாக ரூ.50,000 நிர்ணயம்
அடுத்ததாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புவோர், ஜனவரி 24, 2026 முதல் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், விண்ணப்பக் கட்டணம் ரூ.50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அறிவிப்பு, கட்சியின் தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும், குடியரசு தினமான ஜனவரி 26, 2026 அன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, கிராம சபையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு விளக்கி, அதிக அளவில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த கமல்ஹாசன்
VIDEO | Chennai, Tamil Nadu: “Makkal Needhi Maiam is in talks with DMK-led alliance, we will announce seat-sharing soon”, says MNM General Secretary Arunachalam, after district secretaries meeting chaired by Kamal Haasan.#MNM #DMK
(Visuals Source: Third Party)
(Full video… pic.twitter.com/vvbKtIbALw
— Press Trust of India (@PTI_News) January 24, 2026
இதற்கிடையே, தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்பாகவும் மக்கள் நீதி மய்யம் முக்கிய தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் மரியாதையை பாதிக்கும் வகையில், நியமனப் பதவியில் இருக்கும் தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் தனது பதவியின் மரியாதையை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் எனவும் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : அமைச்சர் நேரு துறையில் ரூ.1000 கோடி ஊழல்?தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதே நேரத்தில், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப் பழக்கம் குறித்து கடும் கவலை தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம், இதனை கட்டுப்படுத்த உயர்மட்ட குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.