வேறொரு நபருடன் பேசியதால் ஆத்திரம்.. காதலியை கல்லால் அடித்து கொலை செய்த காதலன்!
Man Killed 17 Years Old Girlfriend | மதுரையில் தனது காதலி வேறு ஒரு ஆணுடன் பேசுவதால் ஆத்திரமடைந்த இளைஞர், அந்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
மதுரை, செப்டம்பர 29 : மதுரையில் (Madurai) தனது காதலி வேறு ஒரு ஆணிடம் பேசியதை கண்டு ஆத்திரமடைந்த இளைஞர், அவரை அடித்தே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரிடம் பேச வேண்டாம் என பலமுறை கூறியும் அந்த பெண் கேட்காத நிலையில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
காதலியை அடித்தே கொலை செய்த இளைஞர்
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா என்ற 19 வயது இளைஞர். பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இவர் சிவகாசியை சேர்ந்த தனது தாய் மாமன் மகளான 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த நிலையில், ஜெயசூர்யாவும் வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார். இதனால் அவருடன் பேசுவதை அந்த சிறுமி நிறுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி, வேறொரு இளைஞரிடமும் அவர் பேசி வந்துள்ளார்.
இதையும் படிங்க : வீட்டில் தனியாக இருந்த தாய், மகள்.. கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.. அதிர்ந்த கிருஷ்ணகிரி
தனது காதலி வேறொரு நபருடன் பேசுவது தெரிந்து ஜெயசூர்யா, சிறுமியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். ஆனால், அதையெல்லாம் அந்த பெண் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 28, 2025) சிறுமியை அழகர்கோயிலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ராஜக்கூர் கண்மாய் கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வேறு யாருடனும் பேசக்கூடாது என அவர் ஜெயசூர்யாவிடம் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் ஷாக்
காதலியை கல்லால் அடித்து கொலை செய்த இளைஞர்
தனது காதலியை வேறு யாருடனும் பேசக்கூடாது என அந்த இளைஞர் கூறிய நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர் கீழே கிடந்த கல்லை எடுத்து இளம் பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உதனை அடுத்து ஜெயசூர்யா காவல் நிலையத்தில் சிறுமியை கொலை செய்ததாக சரணடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெயசூர்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.