மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்.. என்னென்ன கோரிக்கைகள்?

Madurai Sanitization Workers Protest: சென்னையில் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வந்தனர், அந்த வகையில் நாளை முதல் (ஆகஸ்ட் 18, 2025) 28 கோரிக்கைகளை முன்வைத்து காத்திருப்பு மாநகராட்சி வளாகம் முன் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்.. என்னென்ன கோரிக்கைகள்?

கோப்பு புகைப்படம்

Published: 

17 Aug 2025 13:00 PM

மதுரை, ஆகஸ்ட் 17, 2025: சென்னையை தொடர்ந்து தற்போது மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 18 2025 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் 1 2025 அன்று சென்னையை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் மற்றும் தனியார்மயமாக்க கூடாது என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். பின்னர் தமிழக அரசு தரப்பில் அவர்களுக்கு சிறப்பு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை ஆகஸ்ட் 18, 2025 ஆம் தேதி முதல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

28 கோரிக்கைகள் முன்வைத்து போராட்டம்:

மதுரை மாநகராட்சியில் குப்பை அகற்றும் தூய்மை பணியாளர்கள் தனியார் நிறுவனமான அவர் லேண்ட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், கொரோனா கால ஊக்கத்தொகை, தீபாவளி போனஸ் மற்றும் நியாயமான ஊதிய உயர்வு உள்ளிட்ட 28 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த போராட்டமானது. மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது. தனியார் மையமாக்கள் முடிவால் தங்களது தற்போதைய ஊதியமான ரூ. 23 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் ஆக குறைக்கப்படுகிறது என்றும் பனி பாதுகாப்பு அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க: பிறந்தநாளில் திருமாவளவன் வீட்டில் நடந்த சோகம்.. சமூக வலைதளத்தில் உருக்கம்!

இது தொடர்பாக பேசிய சி.ஐ.டி.யு பொதுச் செயலாளர் எம். சுப்பிரமணியன் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது தொடர்ந்து வேலைப்பளு அதிகரிக்க கூடும், ஊதியம் குறைக்கப்படுகிறது அதே போல் பணியிடத்தில் முறைகேடுகள் ஏற்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு தற்போது வரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நாகை – இலங்கை கப்பல் சேவை.. மாணவர்களுக்கு சூப்பர் ஆஃபர்.. மிஸ் பண்ணாதீங்க!

அதேபோல் இதற்கு முன்னதாகவும் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 2025 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் போராட்டங்களை நடத்தினர். அப்போது மாநகராட்சி தரப்பில் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.