மெரினா கடைகள் வழக்கில் மாஃபியா பின்னணி? உயர் நீதிமன்றம் சந்தேகம்

Madras High Court Raises Mafia Suspicion: மெரினா கடற்கரையில் கடைகள் அமைக்க உரிமை கோரி 600க்கும் மேற்பட்டோர் வழக்கில் இணைக்க மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதன் பின்னணியில் மாமூல் வசூல் மற்றும் மாஃபியா தொடர்பு உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியுள்ளது.

மெரினா கடைகள் வழக்கில் மாஃபியா பின்னணி? உயர் நீதிமன்றம் சந்தேகம்

மெரினா கடைகள்

Published: 

04 Mar 2026 18:24 PM

 IST

மெரினா கடற்கரையில் கடைகள் அமைக்க அனுமதி கோரி 600-க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், இதன் பின்னணியில் ஏதேனும் ‘மாஃபியா’ கும்பல் செயல்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் பலத்த சந்தேகம் எழுப்பியுள்ளது. பழைய கடைக்காரர்களிடம் மாமூல் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஜெகதீஷ் சந்திரா கவலை தெரிவித்துள்ளனர். கடற்கரையின் இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில், உணவு மற்றும் இதரப் பொருட்களுக்காக மொத்தம் 300 கடைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சிக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. மெரினாவை முழுமையான வணிகத் தளமாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும், அங்கு கடை அமைப்பது ஒருவரது அடிப்படை உரிமை அல்ல என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

கடைக்காரர்கள் பின்னணியில் மாஃபியா சந்தேகம்

மெரினா கடற்கரையில் கடைகள் அமைக்க உரிமை கோரும் மனுக்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான சந்தேகத்தை முன்வைத்துள்ளது. 600க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் வழக்கில் தங்களை இணைக்க கோரி மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதன் பின்னணியில் அமைப்புசார்ந்த குழு செயல்படுகிறதா என்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்பு கடை வைத்திருந்தவர்களிடமிருந்து மாமூல் வசூலிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் வழக்கில் இணைக்க மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானதால், மாபியா கும்பல் செயல்பாடு உள்ளதா என நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஜெகதீஷ் சந்திரா சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

Also Read: ராணிப்பேட்டை அருகே விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் கவலைக்கிடம்

300 கடைகள் மட்டுமே அனுமதி

மெரினாவில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், உணவு பொருட்கள், பொம்மைகள் மற்றும் பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் மட்டுமே அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு முன்பே உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கு மேல் கடைகள் அமைப்பது கடற்கரையின் இயல்பை பாதிக்கும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மெரினாவை முழுமையான வணிக தளமாக மாற்ற அனுமதிக்க முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உரிமை கோர முடியாது – நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

கடற்கரையில் கடைகள் அமைப்பது ஒரு அடிப்படை உரிமை அல்ல என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். முறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, எதிர்கால சந்ததியினருக்கான இயற்கை வளத்தை பாதிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மெரினாவை வியாபார மையமாக மாற்றும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும், இல்லையெனில் சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலன் பாதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ