கார்த்திகை தீபம் இன்று.. தயார் நிலையில் திருவண்ணாமலை.. முழு விவரம்!

திருவண்ணாமலையில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பரணி தீபத்தை வணங்கி வழிபட்டனர். தொடர்ந்து, மாலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதனிடையே, இன்று அங்கு மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம் இன்று.. தயார் நிலையில் திருவண்ணாமலை.. முழு விவரம்!

திருவண்ணாமலை கோவில்

Updated On: 

03 Dec 2025 08:03 AM

 IST

திருவண்ணாமலை, டிசம்பர் 03: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி ஆலயத்தில் அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 2,668 அடி உயரமான அண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இந்த புனித தருணத்தை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கூடியுள்ளனர். கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத்திருவிழா, தினமும் காலை சன்திரசேகரர் உள்பட பல ஸ்தல மூர்த்திகளின் எழுந்தருளல், இரவில் பஞ்சமூர்த்திகளின் வாகன சேவைகளுடன் உற்சாகமாக நடைபெற்று வந்தது. ஒன்பது நாள் விழாக்களின் முடிவில், இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை தரிசிக்க தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்தும் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி, கோவிலும் நகர மன்ற பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் எது… கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

பரணி தீபம் – அதிகாலை தரிசனம்:

இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தரிசிக்க காலை நேரத்திலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மாலை 5 மணிக்கு தீப தரிசன மண்டபத்தில் விநாயகர், முருகன், அண்ணாமலையார்உணாமுலையம்மன், பராசக்தி, சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்கள் எழுந்தருளுவர். அடுத்து 5.55 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத் தரிசனம் நடைபெறும். இதற்குப் பின்னர் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

மகா தீப கொப்பரை:

இவ்வருட மகா தீப கொப்பரை, 5 அடி உயரம் சுமார் 300 கிலோ எடையுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. இக்கொப்பரைக்கு தேவையான 3,000 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் செய்யப்பட்ட பெரிய திரி இவை இன்று அதிகாலை தனியாக மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. நேற்று கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பின்னர் கொப்பரை மலை உச்சிக்கு ஏற்றப்பட்டுள்ளது. இன்று தீபம் ஏற்றப்படும் வரை பக்தர்களின் ஏற்றம் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட அளவில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி:

காலை பரணி தீபத்துக்கு 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாலை மகா தீபத்துக்கு 6,000 பக்தர்கள் கோயில் உள்வழியில் அனுமதிக்கப்படுகின்றனர். ராஜகோபுரம் வழியாக காலை 5.30 மணி முதல் 9 மணி வரை அதிகபட்சம் 20,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இதையும் படிக்க: கார்த்திகை தீபம்: பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கிய கட்டுப்பாடு – விவரம் இதோ

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:

விழாப் பாதுகாப்பை கண்காணிக்க வட மண்டல ஐஜி அஸ்ராகர் தலைமையில் 6 டிஐஜிக்கள், 29 எஸ்பிக்கள், 15,000 போலீசார் திருவிழா முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு படையணிகளும், கண்காணிப்பு டிரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!