நல்லது செய்ய அரசியல் வேண்டாம்.. நடிகர்களை குறிப்பிட்ட சிவராஜ்குமார்.. கொதிக்கும் தவெகவினர்!
Why Actors Should Enter Politics: நடிகர்கள் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும். நடிகராக இருந்து கொண்டே மக்களுக்கு நல்லது செய்யலாம் என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வெளிப்படையான கருத்து தெரிவித்துள்ளார். இவரது கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.

Why Actors Should Enter Politics
தமிழகத்தில் சினிமா துறையை சேர்ந்த நட்சத்திர நடிகர்கள் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருகின்றனர். அதன்படி, அவர்கள் தங்களது ரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றி, பின்னர் கட்சியாக பதிவு செய்து சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் களம் காண்கின்றனர். இந்த முறையானது முந்தைய காலத்தில் இருந்து தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது. அதன்படி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அரசியலுக்கு வந்துள்ளனர். இவர்களின் வரிசையில் தற்போது, நடிகர் விஜய் அரசியலில் குதித்துள்ளார். இவர், தனது ரசிகர் மன்றத்தை இயக்கமாக மாற்றி, அதனை தற்போது தமிழக வெற்றிக் கழகமாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
கன்னட சூப்பர் ஸ்டாரிடம் அரசியல் கேள்வி
இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் நடித்த “45 தி மூவி” என்ற படத்தின் ப்ரமோஷன் பணி நடைபெற்று வருகிறது. அண்மையில், இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரிடம் செய்தியாளர்கள் அரசியல் தொடர்பான கேள்வி எழுப்பி இருந்தனர். அதில், தமிழ்நாட்டில் எம். ஜி. ஆர். காலத்திலிருந்து நட்சத்திர நடிகர்களான விஜயகாந்த், சரத்குமார், விஜய் ஆகியோர் அரசியலுக்கு வருகின்றனர்.
மேலும் படிக்க: விஜய் பங்கேற்கும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா – யாருக்கு அனுமதி? கட்சித்த தலைமை அறிவிப்பு
நடிகராகவே மக்களுக்கு நல்லது செய்யலாம்
ஆனால், கர்நாடகாவில் நட்சத்திர நடிகர்களான உபேந்திரா , ராஜ்குமார், சிவராஜ்குமார் உள்பட எந்த நடிகர்களும் எதற்காக அரசியலுக்கு வருவதில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அரசியல் ரீதியாகவே பதில் அளித்து இருந்தார். அதில், மக்களுக்கு நல்லது செய்ய நடிகர்களுக்கு அதிகாரம் அவசியம் இல்லை. நடிகராக இருந்து கொண்டே மக்களுக்கு நல்லது செய்யலாம்.
சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பேசிய வீடியோ
“An actor doesn’t need to enter politics or seek power to help the people in need.
Politics indeed introduces bias towards people and I prefer to help everyone impartially, with my own money”
– A very clear and honest response👇 from the Kannada cine actor cum superstar Shri.… pic.twitter.com/sS8HaCZE59
— தமிழ்த்தேசியம் (@Tamil_Dhesiyam) December 22, 2025
நடிகர்கள் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்
இதற்கு எதற்காக அரசியலுக்கு வர வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். இவரின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளானதுடன், புதிதாக அரசியலுக்கு வந்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிவராஜ்குமாரின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பிய கேள்வி
இதில், தனிப்பட்ட முறையில் சில உதவிகளை செய்யலாம். ஆனால், பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதிகாரம் நிச்சயமாக தேவைப்படும். ஒரு கிராமத்தையோ, மாவட்டத்தையோ, மாநிலத்தையோ முன்னேற்ற வேண்டுமென்றால் அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று பலதரப்பட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை மையமாக வைத்து இந்த அரசியல் கேள்வி எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற முதல்வர், தைப்பூச விழாவில் பங்கேற்பாரா? வானதி சீனிவாசன் கேள்வி!!