சூடுபிடிக்கும் அரசியல் களம்.. திமுக கூட்டணியில் 16 தொகுதிகள் கேட்க திட்டம் – காதர் மொய்தீன்..
IUML - DMK: இந்திய ந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, திமுக கூட்டணியில் 16 தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை வைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கோப்பு புகைப்படம்
திருச்சி, டிசம்பர் 21, 2025: வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுக தலைமை இடம் வலியுறுத்துவோம் என காதர் மொய்தீன் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, திமுக கூட்டணியில் 16 தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை வைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு அரசியல் அணிகள் இந்தப் போட்டியில் உள்ளன.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:
இதில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் அதே கூட்டணி தொடர்கிறது. இந்தச் சூழலில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான விவாதங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கூட்டணி கட்சிகள் தங்களுக்கான தொகுதி எண்ணிக்கையை வெளிப்படுத்தி வருகின்றன.
மேலும் படிக்க: சென்னையில் 6% குறைவாக பதிவான வடகிழக்கு பருவமழை.. எங்கே அதிகம் தெரியுமா? – வெதர்மேன் டேட்டா..
நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்ப குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய தீவிரமாக பணியாற்றுவது எஸ் ஐ ஆர் கணக்கெடுப்பிற்கு பின்பு 97 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது இது வாக்குரிமையை மட்டுமின்றி மத்திய அரசின் சூழ்ச்சி அரசியலான குடியுரிமையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே ஜனவரி 18 வரை நடைபெற உள்ள புதிய வாக்காளர் பதிவு வெளிநாடு வாக்காளர் பதிவு வாக்காளர் திருத்தம் போன்ற பணிகளில் அதற்குரிய வடிவங்களில் மனுசெய்து எவருடைய பெயரும் விடுபட்டு விடாமல் முழுமையான கவனத்தை செலுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் படிக்க: “நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களும் திமுக வாக்குகளே” பகீர் கிளப்பிய நயினார் நாகேந்திரன்
16 தொகுதிகள் கேட்க திட்டம்:
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜனவரி 28 ஆம் தேதி 8000க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை மையமாக கொண்டு செயல்படும் மஹல்லா ஜமாத் மாநாடு நடைபெற உள்ளது. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பிற்கு பின் 97 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளார்கள். இறந்தவர்கள், இரட்டை பதிவை நீக்கியது சரி தான் ஆனால் இடம்பெயர்ந்தவர்கள் நீக்கியது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜனவரிக்குள் அதை சரி செய்வார்கள் என நம்புகிறோம்.
திமுக கூட்டணியில் இஸ்லாமியர்கள் போட்டியிட 16 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுக தலைமையிடம் வலியுறுத்துவோம் அதில் ஐந்து தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கேட்போம் என்றார்.