மாணவர்களே..! நோ ஹாலிடே.. நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..
School Announcement: அக்டோபர் 21, 2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பணி நாள் வேறு நாளில் ஈடு செய்யப்படும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. அந்த வகையில், தற்போது நாளை, அதாவது அக்டோபர் 25, 2025 தேவையான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 24, 2025: வழக்கமாக வார இறுதி நாட்களான சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் செயல்படாது விடுமுறை அளிக்கப்படும். ஆனால் வரவிருக்கும் சனிக்கிழமை, அதாவது அக்டோபர் 25, 2025 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21, 2025 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த நாளை ஈடு செய்யும் வகையில் நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கும்.
தமிழகத்தை பொறுத்தவரையில் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களாக கருதப்படுகிறது; சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள் மற்றும் புறகல்லூரிகளுக்கும் பொருந்தும்.
மேலும் படிக்க: வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
தீபாவளி பண்டிகை ஒட்டி விடுமுறை:
2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, 2025 அன்று கொண்டாடப்பட்டது. திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை என்பதால் செவ்வாய்க்கிழமை உடனடியாக வேலைக்கு திரும்புவதில் சிக்கல்கள் இருப்பதாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு அந்த கோரிக்கையை ஏற்று அக்டோபர் 21, 2025 அன்று விடுமுறை என அறிவித்தது. மக்கள் அனைவரும் சந்தோஷமாக தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து கொண்டாடி மகிழ்வதற்காக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அதே சமயத்தில், வெளியூரிலிருந்து அல்லது சொந்த ஊரிலிருந்து திரும்பும் மக்கள் அடுத்த நாள் பணிக்கு வருவதில் சிக்கல்கள் இருக்கக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டது.
மேலும் படிக்க: லிஸ்டில் 5 சின்னம்.. விசில் தான் வேண்டும்.. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க த.வெ.க திட்டம்..
நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும்:
அக்டோபர் 21, 2025 அன்று விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த பணி நாள் வேறு நாளில் ஈடு செய்யப்படும் என ஏற்கனவே குறிப்பிடப்பட்டது. அந்த வகையில், தற்போது நாளை, அதாவது அக்டோபர் 25, 2025 தேவையான சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21, 2025 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்படி விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 25, 2025 அன்று பணிநாளாக செயல்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை பாடவேளை ஒழுங்கை பின்பற்றி முழு பணிநாளாக கருதி செயல்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.