திடீரென பிரேக் போட்ட டிரைவர்… ஓடும் பேருந்தில் இருந்து விழுந்த 9 மாத குழந்தை பலி.. சேலத்தில் சோகம்!
Infant Dies In Salem : ஓடும் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திடீரென ஓட்டுநர் பிரேக் அடித்ததால், குழந்தை பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பேருந்தின் முன்பக்க கதவை மூடாததால், விபரீதம் நிகழ்ந்தது என பெற்றோர் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும், தேவூர் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்துள்ளனர்.

சேலம், மே 14 : சேலம் மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த 9 மாத குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால், 9 மாத குழந்தை தூக்கி வீசப்பட்டு ஓடும் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்நதுள்ளது. அந்த நேரத்தில் பேருந்து படிக்கட்டின் கதவுகளும் திறந்தபடி இருந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் முத்தம்பள்ளி கரங்களூர் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை. இவரது மனைவி முத்துலட்சுமி. இநத தம்பதிக்கு ஏழு வயதில் கம மகள் மற்றும் 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ராஜதுரை கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், இவர்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு முன்பு, தனது சொந்த ஊருக்குச் சென்று உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.
திடீரென பிரேக் போட்ட டிரைவர்
சடங்குகளுக்குப் பிறகு, நான்கு பேரும் சேலத்திலிருந்து கோயம்புத்தூருக்கு அரசு பேருந்தில் 2025 மே 14ஆம் தேதியான நேற்று இரவு பயணம் மேற்கொண்டு இருந்தனர். அப்போது, ராஜதுரை மற்றும் முத்துலட்சுமி, ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் அமர்ந்திருந்தனர்.
தனது 9 மாத குழந்தையை முத்துலட்சுமி மடியில் வைத்திருந்ததாக தெரிகிறது. 2025 மே 13ஆம் தேதியான நேற்று இரவு 10 மணியளவில் சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கத்தேரி-வயக்காரனூர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது, ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்தார். இதில், ராஜதுரையின் தோளி சாய்ந்திருந்த குழந்தை, பேருந்தின் படிகட்டுகளில் இருந்து விழுந்து, சாலையில் விழுந்துள்ளது. இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது.
ஓடும் பேருந்தில் இருந்து விழுந்த 9 மாத குழந்தை பலி
இதனால் அலறிய பெற்றோர், குழந்தையை மீட்டு, சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உயிரிழந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய ஓட்டுநர், நடத்துனர் மற்றும் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பேருந்தின் கதரவை மூடுமாறு, பலமுறை நடத்துனரிடம் சொன்னதாகவும், ஆனால், அதனை நடத்துநர் கவனிக்கவில்லை என்றும் ராஜதுரை கூறினார். மேலும், நடத்துனர் திடீரென பிரேக் போட்டதால் தான், தனது குழந்தை இறந்ததாகவும், பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். இதனை அடுத்து, அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என ராஜதுரை தனது புகாரில் கூறியுள்ளார்.