தமிழ்நாட்டில் நாளை இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை

Heavy Rain Alert : அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் பிப்ரவரி 21, 2026 நாளை 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நாளை இந்த 6 மாவட்டங்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

மாதிரி புகைப்படம்

Published: 

20 Feb 2026 16:18 PM

 IST

தமிழ்நாட்டில் பனிகாலம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. கடந்த சில மாதங்களால் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டது. இனி வரும் நாட்களில் வெயில் மெல்ல அதிகரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பிப்ரவரி 20, 2026 அன்று காலை வலுவிழந்ததாகவும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வாிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதனால் தமிழகத்தில் பிப்ரவரி 21, 2026 நாளை 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் பிப்ரவரி 21, 2026 அன்று நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு சில இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து… நுரையீரலில் மண் அடைத்ததால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. ஆபத்தான நிலையில் இருவர்!

மேலும் வருகிற பிப்ரவரி 22, 2026 ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல், மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 23, 24,25,26 ஆகிய தேதிகளில் மாநிலத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ரயில் பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 44 மின்சார ரயில்கள் ரத்து..

சென்னையில் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளைய தினம் வானம் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மன்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் அதிக வெப்பநிலையாக 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் நிலவும் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories
ஜனநயாகன் படத்துக்கு தடை.. சிபிஐ விசாரணை… பாஜக அழுத்தம் கொடுக்கிறது – அருண்ராஜ் பேச்சால் பரபரப்பு
கொண்டை ஊசி வளைவுகள்.. குறுக்கிடும் வனவிலங்குகள்.. த்ரில்லிங்கான சுற்றுலா அனுபவம்… இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
நாளை 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளர்கள் அறிமுகம்.. எந்த தொகுதியில் சீமான் போட்டி?
அமைச்சர் கே.என். நேருக்கு எதிரான புகார்.. வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
விதியை மீறும் வாகனங்களுக்கு ரூ.25,000 ஸ்பாட் ஃபைன்.. சென்னை மாநகராட்சி அதிரடி..
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம்… நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை… திமுக அரசின் திட்டத்தை பட்டியலிட்டார்!
வந்தே பாரத் மற்றும் அம்ரித் பாரத் ரயில்களில் Emergency Quota .. எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்?
மணமகளின் பையை திருடிச் சென்ற நபர்.. ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி கொள்ளை..
சந்தேகத்தின் பெயரில் காதலியை கொலைசெய்த காதலன்
ஏப்.30 வரை "ஜனநாயகன்" வெளியாக வாய்ப்பில்லை - ரசிகர்கள் அதிர்ச்சி!