அரசுப் பேருந்து – வேன் மோதி விபத்து: 2 பெண்கள் பலி.. காலையிலேயே கோரம்!!

நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரம் கூட முடியாத நிலையில், இன்று காலையிலேயே மற்றொரு அரசுப்பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பேருந்து - வேன் மோதி விபத்து: 2 பெண்கள் பலி.. காலையிலேயே கோரம்!!

கோர விபத்து

Updated On: 

01 Dec 2025 08:45 AM

 IST

செங்கல்பட்டு, டிசம்பர் 1: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே அரசு பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் காலையிலேயே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும், கூவத்தூரில் இருந்து வேலைக்கு 20 பேரை ஏற்றிச்சென்ற தனியார் வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். தொடர்ந்து, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இதையும் படிக்க : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்தது பாஜகவின் சித்து விளையாட்டி – திருமாவளவன் விமர்சனம்..

அரசுப் பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதல்:

கூவத்தூரில் இருந்து 20க்கும் மேற்பட்டோரை வேலைக்கு ஏற்றிக்கொண்டு அந்த வேன் வந்துள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றுக்கொண்டிருந்த அரசுப்பேருந்து எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக அரசுப்பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டுள்ளது. சரியாக கிழக்கு கடற்கரை சாலை குன்னத்தூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இரண்டு பெண்கள் உயிரிழப்பு:

இதில், வேனில் பயணித்த பானு (24), உமா (40) ஆகிய இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து, வேனில் பயணித்த மேலும் சிலர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டனர். அதில், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.

இதையும் படிக்க : ஆபத்தில் ஓடியவர்கள், “தவெக குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்”.. சபாநாயர் அப்பாவு தாக்கு!!

கதறி அழுத சக நண்பர்கள்:

இதனிடையே, உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்களும் சாலையிலேயே ஓரமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், உடன் வந்த பெண்கள் அவர்கள் உடல்களை பார்த்து கதறி அழுத சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கிழக்கு கடற்கரைச் சாலையில் அதிகாலையில் நடந்த இந்த விபத்துச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம், உயிரிழந்த பெண்களின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வு செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சூரியன் மறைந்த பிறகு ஏன் நகம் வெட்டக்கூடாது?
ஒரே காரில் வலம் வந்த தோனி - கோலி கூட்டணி - வைரலாகும் வீடியோ
அவரை அடிக்க வேண்டும் என தோன்றியது... ரஹ்மான் குறித்து சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்த ராம் கோபால் வர்மா
‘உருவானது கொசு தொழிற்சாலை’.. டெங்குக்கு எதிராக மக்களை பாதுகாக்க புதிய திட்டம்!!