மழைக்கு குட்பை.. தமிழகத்தில் இனி வறண்ட வானிலை தான்… வானிலை ரிப்போர்ட் இதோ!!
Weather forecast: வரும் 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை
சென்னை, ஜனவரி 28: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் பனி பொழிவு குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் பனி அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், எப்போது மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், இன்று (ஜனவரி 28) முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும், வறண்ட வானிலையே நிலவக்கூடும். எனினும், வரும் 31 மற்றும் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ஆதரவாளர் அய்யப்பன்?டிடிவி தினகரனுடன் திடீர் சந்திப்பு…பின்னணி என்ன!
குறைந்தபட்ச வெப்பநிலை:
அதேநேரம், குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், இன்று முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும், பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை கணிசமாக குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அளவின் வேறுபாடு:
அதேபோல், இன்று (ஜனவரி 28) முதல் 31ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்.. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை..
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று (ஜனவரி 28) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.