தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையா? இந்தியன் ஆயில் சொன்ன தகவல்
No Fuel Shortage in Tamil Nadu: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் இருந்தபோதிலும், தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவை போதுமான அளவில் இருப்பதாகவும், விநியோகச் சங்கிலி சீராக இயங்குவதாகவும் தெரிவித்துள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
தமிழ்நாடு மே 10: இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் (War tension between India and Pakistan) நிலவினாலும், எரிபொருள் பற்றாக்குறை இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தியன் ஆயிலும் பாரத் பெட்ரோலியமும் (Indian Oil and Bharat Petroleum) , பெட்ரோல், டீசல், எல்பிஜி போன்றவை போதுமான அளவில் உள்ளதாக உறுதியளித்துள்ளன. விநியோக சங்கிலி சீராக இயங்குவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். தமிழகத்தில் எரிபொருள் பற்றாக்குறை இல்லையெனவும், வதந்திகளை நம்ப வேண்டாமென இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நிலவி வரும் சூழல்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல்கள் நடைபெறும் நிலையில், நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.
போதுமான எரிபொருள் இருப்பு – இந்தியன் ஆயில் விளக்கம்
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் 2025 மே 9ஆம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நாடு முழுவதும் எங்கள் நிறுவனத்திடம் போதுமான அளவு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி இருப்பு உள்ளது. எங்கள் விநியோகச் சங்கிலி முறையாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் பீதியுடன் எரிபொருள் வாங்குவதைக் தவிர்க்க வேண்டுகிறோம். தேவையற்ற கூட்ட நெரிசலை தவிர்ப்பதன் மூலம் விநியோகம் தடையின்றி நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பெட்ரோலியமும் உறுதியளிப்பு
இதையே ஆதரிக்கும் வகையில் பாரத் பெட்ரோலியமும், “எங்கள் நெட்வொர்க்கில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி ஆகியவை போதுமான அளவில் உள்ளன. நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் பீதி அடைய தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நிலைமை சீராக உள்ளது
தமிழ்நாட்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை இருப்பதாக சில வதந்திகள் பரவிய நிலையில், மக்கள் தங்களது வாகனங்களில் அதிக அளவில் எரிபொருள் நிரப்ப ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அதிகாரப்பூர்வமாக, “தமிழ்நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை. எங்களிடம் போதுமான அளவில் இருப்பு உள்ளது. மக்கள் பீதி அடைய வேண்டாம்” என எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்தியன் ஆயில் விளக்கம்
#IndianOil has ample fuel stocks across the country and our supply lines are operating smoothly.
There is no need for panic buying—fuel and LPG is readily available at all our outlets.
Help us serve you better by staying calm and avoiding unnecessary rush. This will keep our…
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) May 9, 2025
நிலைமை சீராகவே உள்ளது – வதந்திகளை நம்ப வேண்டாம்
மே 10, 2025 அன்று தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.80 ஆகவும், டீசல் விலை ரூ.92.49 ஆகவும் உள்ளது. விலைகள் கடந்த சில நாட்களாக சிறிய மாற்றங்களுடன் நிலைத்திருக்கின்றன. எனவே, எரிபொருள் பற்றாக்குறை குறித்து பரவும் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பொதுமக்கள் நம்ப வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.