மெகா ஹிட் படமான புஷ்பா 2, ஜப்பானில் வெளியாவதற்கு முன்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றுள்ளார். ஜனவரி 16 ஆம் தேதி ஜப்பானில் வெளியாக உள்ள புஷ்பா 2 படத்தின் புரமோஷனுக்காக, ஸ்டைலிஷ் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் அங்கு சென்றுள்ளார். இதையடுத்து, டோக்கியோ நகரின் அழகியலை பின்னணியாகக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, ஜப்பானில் புஷ்பா 2 படத்தை வெளியிடும் கீக் பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம், இந்திய சினிமாவின் மெகா ஹிட் படம் ஜப்பான் ரசிகர்களைக் கவர வருகிறது. புஷ்ப ராஜ் ஜனவரி 16 முதல் ஜப்பானில் தீ போல பரவத் தயாராக இருக்கிறார் என சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தது.