மனிதனின் நம்பிக்கையான நண்பன் நாய் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ‘பைலட்’ என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய். நைனித்தால் மாவட்டத்தின் டெராய் மேற்கு வனப் பிரிவை ஒட்டியுள்ள மதன்பூர் கெய்புவா பகுதியில், தனது உரிமையாளரின் உயிரைக் காப்பாற்ற பைலட், கொடிய புலியுடன் போராடி உயிர் தியாகம் செய்துள்ளது.