வைகையில் உயரும் நீர்மட்டம்.. இந்த 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Flood Alert : தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் வைகை அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் 6 அடி உயர்ந்திருக்கிறது. இதனையடுத்து 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்ப்டடுள்ளது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16, 2025 அன்று வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை (Rain) பெய்து வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியன்றும் (Diwali) மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியிருக்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு தீபாவளி நாளில் மழை பெய்த நிலையில், தற்போது 14 வருடங்களுக்கு பிறகு தீபாவளியன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைகை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்ப்டடுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
3 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. முல்லை பெரியாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேனியில் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. தேனி அருகே ஆஞ்சனேயா நகரில் வெள்ள நீர் புகுந்த நிலையில் அங்குள்ள மக்கள் ஜேசிபி மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
இதையும் படிக்க : லீவுக்கு குற்றாலம் போக போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..
அதே போல வைகை அணையில் தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த 12 மணி நேரத்தில் அணையின் நீர் மட்டம் 4 அடி உயர்ந்து 66 அடியாக அதிகரித்தது. இதனையடுத்து தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் ஆறுகளுக்கு அருகில் செல்லவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர் விடுமுறை வருவதால் மக்கள் அதிக அளவில் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அரபிக்கடலில் உருவாகும் புயல்? சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை.. வெதர்மேன் சொன்னது என்ன?
27 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை இந்த 27 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன் படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கரூர், திருச்சி , காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கடலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி, தேனி, நீலகிரி, திருநெல்வேலி, திரூப்பூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, விழுப்புரம், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.