திருமணத்துக்கு மறுத்த மகள்.. விபரீத முடிவு எடுத்த காவலர் தந்தை.. சோக சம்பவம்!
Daughter Denied Marriage | சென்னையில் தனது மகள் திருமணம் செய்துக்கொள்ள மறுப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 19 : சென்னையில் (Chennai) தனது மகள் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் வேண்டாம் என தற்கொலைக்கு முயன்ற அந்த இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தந்தை விபரீத முடிவு
சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். 55 வயதாகும் இவருக்கு சரளா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். ஆனந்தன் மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரது மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஆனந்தன் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்தவர் கொலை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
தாயின் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்ட காவலர்
இந்த நிலையில், திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகள் திருமணம் வேண்டாம் என கூறி தற்கொலைக்கு முயன்றதால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ஆனந்தன் நேற்று (ஆகஸ்ட் 18, 2025) தனது தாய் வீட்டிற்கு சென்று மதிய உணவு சாப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Madurai: மகள் காதல் திருமணம்.. மாப்பிள்ளை கார் ஏற்றி கொலை.. மதுரையில் பகீர் சம்பவம்!
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
பின்னர் உறங்குவதற்காக அறைக்கு சென்றுள்ளார். ஆனால், மாலை வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது ஆனந்தன் அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.