ஆன்லைன் முதலீட்டால் நேர்ந்த விபரீதம்.. தாயும் மகனும் எடுத்த அதிர்ச்சி முடிவு..

அதன்படி, நேற்று முன்தினம் காலை இருவரும் விஷம் அருந்தியுள்ளனர். பின்னர், ரகுவரன் திருச்சியில் வசிக்கும் தனது மூத்த சகோதரர் ராகவனுக்குத் தொடர்பு கொண்டு, "நானும் அம்மாவும் விஷம் குடித்துவிட்டோம், எங்கள் உடல்களை மீட்டு இறுதிச்சடங்கு செய்யுங்கள்" எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.

ஆன்லைன் முதலீட்டால் நேர்ந்த விபரீதம்.. தாயும் மகனும் எடுத்த அதிர்ச்சி முடிவு..

மாதிரிப் புகைப்படம்

Published: 

09 May 2026 08:22 AM

 IST

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் பகுதியில் ஆன்லைன் தொழில் நஷ்டம் மற்றும் குடும்பப் பிரச்சனை காரணமாக தாயும் மகனும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரை அடுத்த தாழம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பில் விஜயா (66) மற்றும் அவரது மகன் ரகுவரன் (38) ஆகியோர் வசித்து வந்தனர். ரகுவரன் நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.

இதையும் படிக்க: அதிக வட்டி தருவதாகக் கூறி கைவரிசை.. 800க்கும் மேற்பட்டோரிடம் கோடி கணக்கில் மோசடி.. தலைமறைவான பெண் கைது!!

ஆன்லைன் முதலீடு தந்த விபரீதம்:

ரகுவரனின் வாழ்க்கை சமீபகாலமாகப் பெரும் போராட்டங்களுக்கு உள்ளாகியிருந்தது. அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வந்தது. இதனால், மன உளைச்சலில் இருந்த ரகுவரன், தனது வருமானத்தை ஆன்லைன் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக 30 லட்ச ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. தொடர் தோல்விகளாலும், கடன் சுமையாலும் மனமுடைந்த ரகுவரனும் அவரது தாயாரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

சகோதரருக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு:

அதன்படி, நேற்று முன்தினம் காலை இருவரும் விஷம் அருந்தியுள்ளனர். பின்னர், ரகுவரன் திருச்சியில் வசிக்கும் தனது மூத்த சகோதரர் ராகவனுக்குத் தொடர்பு கொண்டு, “நானும் அம்மாவும் விஷம் குடித்துவிட்டோம், எங்கள் உடல்களை மீட்டு இறுதிச்சடங்கு செய்யுங்கள்” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். உடனடியாக ராகவன் தனது நண்பர்களுடன் திருச்சியில் இருந்து தாழம்பூர் விரைந்தார். வீட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது, தாய் விஜயா நுரை தள்ளிய நிலையில் பிணமாகக் கிடந்தார். ரகுவரன் மயக்க நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

இதையும் படிக்க: மகன் மரணத்தில் நாடகம்.. போலீசாரையே குழப்பிய தாய்.. கடைசியில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சிக்கினார்!

தற்போதைய நிலை மற்றும் விசாரணை:

ரகுவரன் முதலில் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தாழம்பூர் போலீசார் விஜயாவின் உடலைக் கைப்பற்றித் தாம்பரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ரகுவரனின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ள போலீசார், அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஏமாற்றப்பட்டாரா அல்லது ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிப் பணத்தை இழந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

Follow Us
Related Stories
ஒரு பக்கம் த.வெ.க.. மற்றொரு பக்கம் அதிமுக.. இன்று சென்னையில் நடக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..
மறுபடியும் ஒரு ‘வெளியிலிருந்து ஆதரவு’ அரசியல்.. இடதுசாரிகளின் கடந்த கால வரலாறு என்ன?
த.வெ.க ஆட்சி அமைக்க தேவைப்படும் 2 இடங்கள்.. திருமாவளவன் எடுக்கப்போகும் முடிவு என்ன? இன்று அறிவிப்பு..
5வது முறையாக முதலமைச்சராகும் ரங்கசாமி.. மே 13ல் பதவியேற்பு.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம்!!
உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.. அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட த.வெ.க..
தவெக ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்.. நள்ளிரவில் ஆளுநர் மாளிகையில் நடந்த உச்சகட்ட பரபரப்பு..
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி