சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் – கமல்ஹாசன்..

Kaml Hasan At Agaram: நடிகர் சூர்யாவின் அகரம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட கமல் ஹாசன், சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான். இதை தவிர வேறு எதையும் கையிலெடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது என பேசியுள்ளார்.

சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான் - கமல்ஹாசன்..

கமல்ஹாசன்

Published: 

04 Aug 2025 13:27 PM

 IST

சென்னை, ஆகஸ்ட் 4, 2025: 2017 ஆம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை பல மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த நீட், அந்த சட்டத்தை மாற்றி எழுதுவதற்கான பலத்தை கொடுப்பது கல்விதான் என அகரம் விழாவில் நடிகர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 15 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நடிகரான கமல்ஹாசன், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி தானு, வெற்றிமாறன், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் நீட் குறித்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார்.

நீட் ஏன் வேண்டாம் – கமல்ஹாசன் விளக்கம்:


அதாவது, “ கல்வியும், அன்பும் ஒருங்கே கிடைப்பதில்லை. அம்மாவிடம் கிடைக்கும். அகரத்தில் கிடைக்கும். அது பெரிய விஷயம். சமூகத்தில் பெரியவர்கள் பட்டியலில் சேருவதற்கு தான் நானும் ஆசைப்பட்டேன். சூர்யா இளமையிலேயே ஆசைபட்டுவிட்டார். கல்வியை கற்றே தீருவேன். அதை மற்றவர்களும் கற்றுக்கொள்ள ஆவன செய்வேன் என சொல்வது ஒரு நீட்சி. அகரம் பல மருத்துவர்களை உருவாக்கி உள்ளது. 2017 க்குகு பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடர முடியவில்லை. நீட் ஏன் வேண்டாம் என்கிறோம் என்பது இப்போது புரிகிறதா?.

சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி:

2017-ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை பல மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது ‘நீட்’. அந்த சட்டத்தை மாற்றி எழுதுவதற்கான பலத்தை கொடுப்பது கல்வி தான். அந்த கல்வி ஆயுதமின்றி நாட்டையை செதுக்கவல்லது. சர்வாதிகார, சனாதான சங்கிலிகளை நொறுக்கி தள்ளக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான். இதை தவிர வேறு எதையும் கையிலெடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது.

மேலும் படிக்க: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும் இல்லை – ஓ. பன்னீர்செல்வம் திட்டவட்டம்..

இவர்கள் செய்யும் பணிகள் குறித்து நான் முதல்வரிடம் ஆலோசித்தேன். என்ஜிஓ-க்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றேன். இதை பார்த்து அரசு கடைபிடித்தாலும் தவறில்லை. அது அரசுக்கு அவமானம் கிடையாது. நல்லது எதிரியிடமிருந்தாலும் எடுத்துக்கொள்ளலாம் தவறில்லை. நீட் கூட அரசியல் அல்ல. கல்வி தொடர்புடையது தான்” என பேசியுள்ளார்.