திமுக – காங்கிரஸ் இடையே வெடித்த நேரடி மோதல்.. கூட்டணி குறித்து பேச திமுகவினருக்கு தடை!!

DMK vs Congress direct conflict: தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் திமுக கூட்டணியை எதிர்த்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இருவரும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக கூட்டணியை நிராகரிக்க வேண்டுமென கூறி வருகின்றனர்

திமுக - காங்கிரஸ் இடையே வெடித்த நேரடி மோதல்.. கூட்டணி குறித்து பேச திமுகவினருக்கு தடை!!

Dmk

Updated On: 

28 Jan 2026 06:32 AM

 IST

சென்னை, ஜனவரி 28: கூட்டணி குறித்துப் பொதுவெளியில் பேசக்கூடாது என திமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே அண்மையில் ஏற்பட்டுள்ள வார்த்தை போர், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்து, டெல்லி தலைமை வரை தங்களது குரலை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தசூழலில் மதுரை வடக்கு தொகுதி திமுக எல்எல்ஏ பேசிய பேச்சால், மீண்டும் இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

மேலும் படிக்க: சூடுபிடிக்கும் அரசியல் களம்.. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை..

தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும் காங்கிரஸ்:

அந்தவகையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் திமுக கூட்டணியை எதிர்த்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இருவரும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக கூட்டணியை நிராகரிக்க வேண்டுமென கூறி வருகின்றனர். அதேசமயம், விஜய்க்கு ஆதரவாக இருவருமே பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றர். குறிப்பாக ஜனநாயகன் பட ரிலீஸ் சிக்கலில் இருவரும் முதலாவதாக ஆதரவு கரம் வழங்கினர்.

மதுரை எம்எல்ஏ பரபரப்பு பேச்சு:

இந்த சூழ்நிலையில், மதுரையில் நடைபெற்ற தியாகிகள் தினப் பொதுக்கூட்டத்தில், மதுரை மாநகர் திமுக செயலாளரும், மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தளபதி, காங்கிரஸ் தலைவர்களை விமர்சித்துப் பேசினார். அதாவது, திமுக இல்லையென்றால் டெல்லியில் ‘இந்தியா’ கூட்டணியே கிடையாது. திமுக தலைமை காங்கிரஸ்க்கு சீட் கொடுக்ககூடாது, கொடுத்தாலும் நம்ம ஆட்கள் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்ற தொனியில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

காங்கிரஸ் எம்.பிக்கள் பதிலடி:

அவரது பேச்சிற்கு, காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் பதிலடி கொடுத்தனர். அதாவது, இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்றும், தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் கூறியிருந்தனர். இது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

கட்சித் தலைமையின் உத்தரவு:

இதைத்தொடர்ந்து, கூட்டணி தொடர்பான விஷயங்கள் குறித்துப் பொதுவெளியில் பேசுவதற்கு திமுக நிர்வாகிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது: திமுக நிர்வாகிகள் கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பங்கீடு, கூட்டணிக் கட்சிகள் தொடர்பான பிரச்சனைகள் குறித்துப் பொதுவெளியில் பேசுவதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமியின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி…என்ன அது!

மேலும், தேவையற்ற சர்ச்சைகளால் எந்தப் பயனும் இல்லை என்பதால், அவர்கள் ஆக்கப்பூர்வமான கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி, தேர்தல் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை திமுக தலைவர் உரிய நேரத்தில் அறிவிப்பார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு அடித்தளம் தோண்டும் போது கிடைத்த தங்கம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..
மம்மூட்டியின் பாதயாத்ரா படம்.. கொச்சியில் தொடங்கிய படப்பிடிப்பு..
தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? இதை நோட் பண்ணுங்க..
குடியரசு தின விழா - ஆண்கள் மட்டுமே உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு தலைமை தாங்கும் பெண் அதிகாரி