வீடற்றோர்களுக்கு இரவு நேர காப்பகம்.. 15 அத்தியாவசிய பொருட்கள் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்..
Deputy CM Udhaynidhi Stalin: மெரினா கடற்கரை அண்ணா பூங்கா அருகில் முதற்கட்டமாக 86 நபர்கள் தங்கும் வகையில் 2500 சதுர அடி பரப்பளவில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.86.40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 22, 2025: சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடற்றோருகளுக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதலமைச்சர் திறந்து வைத்தார். மெரினா கடற்கரை அண்ணா பூங்கா அருகில் முதற்கட்டமாக 86 நபர்கள் தங்கும் வகையில் 2500 சதுர அடி பரப்பளவில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.86.40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த இரவுநேர காப்பகத்தில் தண்ணீர் மற்றும் மின்சார வசதியுடன் கூடிய நவீன தங்கும் அறை, மின்விசிறிகள், மின்விளக்குகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி கழிவறைகள் மற்றும் குளியலறைகள், பொருட்களை பாதுகாப்புடன் வைத்திட அலமாரிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
தங்குமிடத்தில் 15 அத்தியாவசிய பொருட்கள் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:
வீடற்று வீதிகளில் உறங்கும் மக்களின் தேவையறிந்து, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், சென்னை மெரினா கடற்கரை அருகே அமைக்கப்பட்டுள்ள இரவு நேர காப்பகத்தினை இன்று திறந்து வைத்தோம்.
மெரினா அண்ணா பூங்கா அருகே பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ 86.40 லட்சம்… pic.twitter.com/FLP0nVC4SZ
— Udhay – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Udhaystalin) December 22, 2025
காப்பகத்தில் தங்கிடும் 86 நபர்களுக்கு பாய், தலையணை, படுக்கை, படுக்கைவிரிப்பு, போர்வை, தட்டு, டம்பளர், தண்ணீர் பாட்டில், பை, உணவு பை, கைலி, சேலை, குளியல் துண்டு, கைத்துண்டு, குளியல் மற்றும் துவைப்பதற்கான பொருட்கள், உள்ளிட்ட நல உதவி தொகுப்புகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் படிக்க: கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்…எப்படி சமாளிக்க போகிறது திமுக !
பின்பு செய்தியாளர்களை சந்தித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ மெரினா கடற்கரையில் இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்துள்ளோம் மழை வெயில் போன்ற நேரங்களில் இடமில்லாமல் உள்ளவர்களுக்கு இந்த காப்பகம் வசதியாக இருக்கும். ஆண்கள் பெண்கள் தனியாக கழிவறைகள் குடிநீர் வசதி மின் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெட், பாய் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளோம். மாநகராட்சி சார்பில் ஏற்கனவே 45 இடங்களில் இந்த மாதிரி வசதிகள் உள்ளது கூடுதலாக மெரினாவிலும் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
SIR மூலம் அதிகப்படியான வாக்காளர் நீக்கம்:
சென்னையில் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு, ஏற்கனவே எஸ் ஐ ஆர் திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் கால அவகாசம் போதாது என தெரிவித்துள்ளோம். பல மாநிலங்களில் குறிப்பாக பீகாரில் எஸ் ஐ ஆர் மூலமாக வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் தெளிவாக கூறினார்.
மேலும் படிக்க: திமுகவும்-அதிமுகவும் பங்காளிகள்…தவெக நிர்மல் குமார் அட்டாக்!
எதிர்பார்த்தது போலவே அதைவிட அதிகமாக 95 லட்சம் வாக்காளர்களும் சென்னையில் 14 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளது. எங்களுடைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் விடுபட்டவர்கள் மாற்றப்பட்டவை, உள்ளிட்டவர்களை எப்படி சேர்ப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கி உள்ளார். பொதுமக்கள் தங்களது வாக்குகள் உள்ளனவா என செக் செய்ய வேண்டும் என அவர் கூறினார்.