வலுவிழக்கும் தித்வா புயல்: இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

தித்வா புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்த தித்வா, ஒரே இடத்தில் நிலைகொண்டிருந்ததால், ஒரு சில பகுதிகளில் மிக கனமழை கொட்டித்தீர்த்தது.

வலுவிழக்கும் தித்வா புயல்: இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

கோப்புப்படம்

Updated On: 

03 Dec 2025 06:33 AM

 IST

சென்னை, டிசம்பர் 03: வங்கக்கடலில் சென்னை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று, காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்தது. இது இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கும் நிலையில், படிப்படியாக மழை குறைய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், வானிலை ஆய்வு மையம், தனியார் ஆய்வாளர்கள் கணிப்புகளை தாண்டி, ஒரே இடத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தங்கியதால், வட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது. குறிப்பாக வட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த மிக கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. அதோடு, தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இதையும் படிக்க : தொடர் மழையால் ஸ்தம்பித்த சென்னை.. பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்..

வானிலை ஆய்வு மையம் தகவல்:

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரைக் கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில், தென்​மேற்கு வங்​கக்​கடல் மற்​றும் அதையொட்​டிய மத்​திய மேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம், வடக்கு திசை​யில் நகர்ந்து நேற்று காலை 5.30 மணி​யள​வில் வலு​விழந்து காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக நீடித்​தது. தொடர்ந்து, சென்​னைக்கு கிழக்கு – தென் கிழக்கே சுமார் 40 கி.மீ. தொலை​விலும், புதுச்​சேரிக்கு வடகிழக்கே 120 கி.மீ. தொலை​விலும் நிலை​கொண்​டிருந்​தது. இது தென்​மேற்கு திசை​யில் வடதமிழகம் – புதுச்​சேரி கடலோரப் பகு​தி​களை நோக்கி நகர்ந்​து, ஆழ்ந்த காற்​றழுத்​தத் தாழ்​வுப் பகு​தி​யாக வலுகுறையக் கூடும். மேலும், காற்​றழுத்த தாழ்​வுப் பகு​தி​யாக வலு குறை​யும்.

3 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை:

இதன் காரண​மாக தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும் இன்று லேசானது முதல் மித​மான மழை பெய்​யக் கூடும். நீல​கிரி, ஈரோடு, கோயம்​புத்​தூர் ஆகிய 3 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை முதல் மிக கனமழை​யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை:

மேலும், திருப்​பூர், தேனி, திண்​டுக்​கல், தென்​காசி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி, சேலம், நாமக்​கல் ஆகிய 8 மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்​யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது. தமிழகத்​தில் நேற்று காலை 8 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக, எண்​ணூரில் 26 செ.மீ. பதி​வாகி​யுள்​ளது.  

இதையும் படிக்க : சென்னைக்கு 40 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. எண்ணூரில் பதிவான 26 செ.மீ மழை..

வலுவிழக்கும் தித்வா புயல்:

தென்​மேற்கு வங்​கக்​கடல் மற்​றும் அதை ஒட்​டிய மத்​தி​யமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் திங்​கள்​கிழமை மாலை நில​விய காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் தென்​-தென்​மேற்கு திசை​யில் மெது​வாக நகர்ந்து வந்​தது. இது, புதுச்​சேரிக்கு வடகிழக்கே 60 கி.மீ. தொலை​விலும், சென்​னைக்கு தெற்கே 80 கி.மீ. தொலை​விலும், கடலூருக்கு வடகிழக்கே 80 கி.மீ. தொலை​விலும் நிலைக்​கொண்​டிருந்​தது. இது மேலும் தென்​மேற்கு திசை​யில் வடதமிழகம்​-புதுச்​சேரி கடலோர பகு​தியை நோக்கி நகர்​கிறது. இது, இன்று காலை ஆழ்ந்த காற்​றழுத்​தத் ​தாழ்வு பகு​தி​யாக வலு​விழக்​க​வுள்​ளது.

மீண்டும் இணையும் பேட்ட காம்போ! - ஜெயிலர் 2 படத்தில் விஜய் சேதுபதி?
பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே - ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
இலங்கை, இந்தோனேசியாவை தாக்கிய இரட்டை புயல்கள் - 350க்கும் மேற்பட்டோர் பலி
முதல்நாளே வசூலை குவித்த ‘தேரே இஷ்க் மே’.. இந்தியில் சாம்ராஜ்யம் படைக்கும் தனுஷ்!!