மகளின் காதலுக்கு எதிர்ப்பு.. தம்பதி எடுத்த விபரீத முடிவு.. நாமக்கல்லில் அதிர்ச்சி!

Namakka Suicide : நாமக்கல் மாவட்டத்தில் தம்பதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி ஆகியோர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகளின் காதலுக்கு எதிர்ப்பு.. தம்பதி எடுத்த விபரீத முடிவு.. நாமக்கல்லில் அதிர்ச்சி!

தற்கொலை செய்து கொண்ட தம்பதி

Updated On: 

07 Jul 2025 10:39 AM

 நாமக்கல், ஜூலை 07 : நாமக்கல் மாவட்டத்தில் தம்பதி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகள் வேறு சமூதாய இளைஞரை காதலித்ததால், ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், உரிய காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் சாலையில் உள்ள கலைவாணி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57). இவர் திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி பிரமிளா (55). இவர்கள் ஆண்டாள்புரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியருக்கு 25 வயது மகளும் 23 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையல், இரண்டு பேரின் சடலங்கள் ரயில் தண்டவாளத்தில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி

இதனை அடுத்து, சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார், இரண்டு பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இரண்டு பேரும் கணவன் மனைவி என்பது தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணையில் இறந்தவர்கள் சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்களின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, சுப்பிரமணி மற்றும் பிரமிளா தம்பதியின் மகள் வேறு சமூககத்தைச் சேர்ந்த நபரை காதலித்தாக தெரிகிறது.

என்ன காரணம்?

இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 2025 ஜூலை 5ஆம் தேதி நள்ளிரவு வரை பெற்றோருடன், அந்த பெண் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், காதலை கைவிட வேண்டும் என சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி பிரமிளா வலியுறுத்தியதாக தெரிகிறது.

ஆனால், அவரது மகள் அதனை கேட்கவில்லை என கூறப்படுகிறது. அடுத்த நாள் தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் வீட்டை வீட்டு வெளியேறிய நிலையில், பின்னர் அவர்களின் உடல்கள் வகுராம்பட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தான் காரணமா அல்லது கடன் பிரச்னையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)