காமராஜர் குறித்து சர்ச்சை கருத்து.. திருச்சி சிவாவுக்கு ஜோதிமணி கண்டனம்.. வலுக்கும் எதிர்ப்பு
Trichy Siva Controversy on Kamarajar : காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, திருச்சி சிவா எம்பிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் வீழ்த்தப்பட்டார் என ஜோதிமணி எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

திருச்சி சிவா - ஜோதிமணி
சென்னை, ஜூலை 16 : திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி (Jothimani MP) தெரிவித்துள்ளார். காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, திருச்சி சிவா எம்பிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் 2025 ஜூலை 15ஆம் தேதி கொண்டாட்டப்பட்டது. இந்த தினத்தை தமிழக அரசு கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட்டப்பட்டது. அனைத்து கட்சி தலைவர்களும் காமராஜருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், சென்னை பெரம்பூர் பகுதியில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேசிய அவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதாவது, காமராஜர் ஏசி இல்லாமல் இருக்க மாட்டார் என திருச்சி சிவா குறிப்பிட்டிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது.
திருச்சி சிவாவுக்கு வலுக்கும் கண்டனம்
இதற்கு அரசியில் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “காமராஜர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
Also Read : கூவம், அடையாறு நதிகள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும்.. தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..
காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது” என குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read : குரூப் 4 தேர்வை ரத்து செய்யுங்கள்… தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்
வலுக்கும் எதிர்ப்பு
முன்னதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், “கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஒரு போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதைத் தமிழக பாஜகவும் எளிமையாகக் கடந்து செல்லாது என்பதையும் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்” என கூறினார். மேலும், திருச்சி சிவாவின் பேச்சு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.