முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!

CM Stalins 73rd birthday: முதல்வர் ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் 73வது பிறந்த நாள்.. பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!

முதல்வர் ஸ்டாலின்

Updated On: 

01 Mar 2026 10:53 AM

 IST

சென்னை, மார்ச் 01: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பிறந்த நாளை முன்னிட்டு சிறுமலர் பள்ளி குழந்தைகளுடன் முதல்வர் ஸ்டாலின் கேக் வெட்டி மகிழ்வைப் பகிர்ந்தார். பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதேபோல், சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

துணை முதல்வர் வாழ்த்து:

முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, துணை முதல்வர் உதயநிதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்தில், இந்திய கூட்டாட்சி தத்துவம் – மாநில உரிமை முழக்கத்தின் சமகால முகம். ஆதிக்கத்திற்கு அடிபணியாத கொள்கை உறுதியாலும், அயராத உழைப்பாலும், மக்கள் மீது கொண்ட பேரன்பாலும், தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்கும் கழகத் தலைவர் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து:

பிரதமர் மோடி தமது வாழ்த்துச் செய்தியில், “நல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ பிறந்த நாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து:

நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்தில், தன்னை கடுமையாக விமர்சித்தவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் குணம் கொண்டவர் முதல்வர் ஸ்டாலின். தண்ணை விமர்சிப்பவர்களையும் மதிக்கும் குண்ட அவரிடம், ஒரு தலைவருக்கான சிறந்த பண்பும் கண்ணியமும் உள்ளதாக புகழாரம் தெரிவித்துள்ளார்.

கனிமொழி வாழ்த்து:

கனிமொழி எம்.பி தனது வாழ்த்துச் செய்தியில், சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் முதலமைச்சர் – தலைவர் அண்ணன் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன்

திருமாவளவன் வாழ்த்து:

விசிக தலைவர் திருமாவளவன் தனது வாழ்த்துச் செய்தியில், இன்று பிறந்தநாள் காணும் நமது முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலினுக்கு எமது மனமுவந்த இனிய வாழ்த்துகள். தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காகவும் ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் நலன்களுக்காகவும் அரசியல் களத்தில் அயராது பாடாற்றி வருகிற ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்’ தலைவர் மற்றும் ‘இந்தியா கூட்டணியின்’ முன்னணி தலைவர் என்கிற முறையில் முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற எமது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us
லாபத்தின் 70% போனஸாக வழங்கிய சீன நிறுவனம்.. இணையத்தில் வைரல்..
கனவில் துரத்தும் மர்ம நபர்… ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘சீக்ரெட் ஸ்டோரீஸ்
பழைய சிம் கார்டுகளிலிருந்து தங்கம்: வைரலான வீடியோவும் எழுந்த எச்சரிக்கையும்
இந்திய சாதி அமைப்பை உள்வாங்கிய AI.. எழும் கவலைகள்..