CM MK Stalin : உழவரைத் தேடி, எளிமை ஆளுமை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

CM MK Stalin to Inaugurate Two New Schemes | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 29, 2025) இரண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். உழவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் உழவரைத் தேடி என்ற திட்டத்தையும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் எளிமை ஆளுமை திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார்.

CM MK Stalin : உழவரைத் தேடி, எளிமை ஆளுமை திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Updated On: 

29 May 2025 09:11 AM

 IST

சென்னை, மே 29 : உழவர்கள், பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் உழவரை தேடி மற்றும் எளிமை ஆளுமை ஆகிய இரண்டு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இன்று (மே 29, 2025) தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில், இந்த இரண்டு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன, இந்த திட்டங்கள் மூலம் யார் யார் பயனடைவார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள இரண்டு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உழவரைத் தேடி

உழவரைத் தேடி என்பது வேளாண் துறை திட்டம் ஆகும். இந்த திட்டத்தை தமிழகத்தில் உள்ள 17,116 வருவாய் கிராமங்களிலும் ஒரு ஆண்டுக்குள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளை சந்திக்கும் இந்த குழுவில், வேளாண் அனைத்து துறைகளின் வட்டார அலுவலர்கள், கால்நடை பராமரிப்புப்புதுறை, கூட்டுறவுத்துறை, வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த குழுவில் உள்ள அதிகாரிகள் விவசாயிகளை நேரில் சந்தித்து வயல்வெளி பாதுகாப்பு, சாகுபடி, மகசூல் என விவசாயம் சார்ந்த அனைத்திற்கும் தொடர்பான விளக்கம் அளிப்பார்கள். இந்த குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் மாதத்திற்கு இரண்டுமுறை இந்த ஆலோசனை முகாம்களை நடத்த உள்ளனர்.

எளிமை ஆளுமை திட்டம்

அரசு பல வகையான சேவைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் அது பொதுமக்களுக்கு சென்று சேர்வதிலும், அவர்கள் அவற்றை பயன்படுத்துவதிலும் சில சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில், அவற்றை சரிசெய்யும் நோக்கில் தான் அரசு இந்த புதிய முடிவை கையில் எடுத்துள்ளது. இந்த எளிமை ஆளுமை திட்டம் மூலம தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசின் செயல்பாடுகளை திறம்பட மேம்படுத்துவதோடு, பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை ஆன்லைனில் மிக சுலபமாக பெற முடியும்.

பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த புதிய இரண்டு திட்டங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து இன்று (மே 29, 2025) காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமதமான இண்டிகோ விமானம்.... பெட் சீட்டை கையோடு எடுத்து வந்த பயணி
இந்த இண்டிகோ தாமதமாகாது.... இண்டிகோ விமானம் போல டிசைன் செய்யப்பட்ட ஆட்டோ
அமெரிக்கா போறீங்களா? இனி டிஎன்ஏ, சமூக வலைதள பரிசோதனை கட்டாயம்
பாகிஸ்தான் திருமணத்தில் துரந்தர் பட பாடல்