நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மசோதாக்களால் தமிழ்நாட்டுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் “பழைய திமுகவை பார்க்க நேரிடும்” எனவும் அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

15 Apr 2026 15:05 PM

 IST

சென்னை, ஏப்ரல் 15, 2026: நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்ற நோக்கில், அரசியலமைப்பு சட்டம் 131வது திருத்த மசோதா 2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இந்த மசோதாக்கள் நாளை கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

தொகுதி மறுவரையறைக்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்:

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மற்றும் பிற கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த மசோதாக்களால் தமிழ்நாட்டுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் “பழைய திமுகவை பார்க்க நேரிடும்” எனவும் அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழ்நாடு சந்திக்கக்கூடிய பாதிப்புகள் குறித்து திமுக எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தொகுதி மறுவரையறையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை மு. க. ஸ்டாலின் வழங்கினார்.

நாளை கருப்பு கொடி ஏற்றும் போராட்டம்:

அதனைத் தொடர்ந்து, திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனையும் நடத்தினார். இந்த நிலையில், மு. க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, நாளை கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அவரது பதிவில், “ கருப்பு கொடிகள் உயரட்டும்!
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காகவே தமிழ்நாடு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறதா?

மேலும் படிக்க: ரூ.8,000 கூப்பன் கேட்ட பெண்ணுக்கு ஆபாச அர்ச்சனை.. மன உளைச்சலில் விபரீத முடிவை எடுத்த பெண்ணால் பரபரப்பு!!

நாளை நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (#Delimitation) திருத்த மசோதா, தமிழ்நாடு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு எதிரான ஒரு “பெரும் வரலாற்று அநீதி” ஆகும்!

விந்த்யா மலைகளுக்கு தெற்கே உள்ள ஒவ்வொரு தென்னிந்தியரும் கொந்தளிப்பில் உள்ளனர். பாஜக தீயுடன் விளையாடுகிறது! நாளை தமிழ்நாடு முழுவதும், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளிலும் பொதுநிலைகளிலும் கருப்பு கொடிகள் ஏற்றப்படும்.

மத்திய அரசு தமிழ்நாட்டின் குரலை மதிக்காமல் பின்வாங்க மறுத்தால், அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும். அதற்கான விலையும் மிகக் கடுமையாக இருக்கும்! திமுக தலைவர் என்றும், அதற்கு மேலாக ஒரு சுயமரியாதை தமிழனாகவும் நான் மீண்டும் எச்சரிக்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..